Captain Miller Teaser: தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியானது...

Captain Miller Teaser :

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் இன்று (ஜூலை 28) நள்ளிரவு 12.01 மணிக்கு படக்குழு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் தனது 3வது படத்தை தனுஷை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ‘ராக்கி’ என்ற படத்தின் மூலமாக கவனத்தை ஈர்த்தார். பிறகு இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் நடிப்பில் வெளியான ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக வலம் வந்தார். இந்நிலையில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் ஜான் கொக்கன், குமரவேல், நிவேதிதா சதீஷ், மூர், டேனியல் பாலாஜி, நாசர், பிந்து, விஜி சந்திரசேகர், அருணோதயம், பால சரவணன் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் 1930-1940 காலக்கட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்றுத் திரைப்படமாக உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது இதில், போர்க்களத்தில் தனுஷ் துப்பாக்கியுடன் நிற்பது போல அவரை சுற்றி பிணங்கள் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி ரசிகர்களால் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இன்று (ஜூலை 28) தனுஷ் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் டீசர் நள்ளிரவு 12.1 மணிக்கு வெளியிட்டது.

Captain Miller Teaser : டீசரின் ஆரம்பம் முதல் இறுதி வரை துப்பாக்கிச் சுடும் சத்தம் தெறிக்கிறது. இதுவரை காதல் காட்சிகளில் மட்டுமே நடித்து வந்த பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தில் துப்பாக்கி ஏந்தியிருப்பதை காணலாம். தனுஷ், சந்தீப் கிஷன், சிவராஜ் குமார் அறிமுக காட்சிகள் கவனத்தை ஈர்க்கின்றன. ஜான் கொக்கன் புதுமையான கெட்டப்பில் வில்லனாகத் தெரிகிறார். 1.33 நிமிட டீசரில் வசனம் பெரிதாக இல்லை என்றாலும் சண்டை, துப்பாக்கி என புதிய அம்சங்களுடன் படம் கவனம் ஈர்க்கிறது. இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறத

Latest Slideshows

Leave a Reply