Captain Miller Trailer : கேப்டன் மில்லர் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். தான் நடிக்கும் கேரக்டராகவே மாறிவிடும் தனுஷின் கேரியரில் கேப்டன் மில்லர் படம் ஒரு மைல்கல்லாக உருவாகியுள்ளது. தனுஷுடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் மற்றும் பலர் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் 12ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படக்குழுவினர் தற்போது புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்து பேட்டிகள் மற்றும் இதர விஷயங்கள் ஒருபுறம் வெளியாகி வரும் சூழலில் படத்தின் ட்ரெய்லர் (Captain Miller Trailer) தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தனுஷ் தனது மகன்களுடன் நிகழ்ச்சியின் மையமாக இருந்தார். நிகழ்ச்சியில் தனுஷின் பேச்சு ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்று பல விஷயங்களைப் பேசினார். அருண் மாதேஸ்வரன் இயக்கிய மூன்றாவது படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்திற்காக தனுஷ் நிறைய மெனக்கெடல்கள் செய்துள்ளார். சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை வைத்து மிகவும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது.

Captain Miller Trailer :

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை (Captain Miller Trailer) தனுஷ் உள்ளிட்ட படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. நேற்று மாலை 5 மணிக்கு ட்ரெய்லர் போஸ்டருடன் வெளியிடப்படும் என்று தனுஷ் முன்பே தெரிவித்திருந்தார். அந்த வகையில் ட்ரெய்லரை பார்த்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மிரட்டலான அனுபவங்களை பதிவு செய்து வரும் சூழலில் கேப்டன் மில்லர் ட்ரெய்லர் (Captain Miller Trailer) என்று அமைதியாக தனுஷ் ட்வீட் செய்துள்ளார். பீரியட் படமாக உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம், சுதந்திர போராட்ட கால மக்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்தியுள்ளது.

துப்பாக்கி, தோட்டா, தெறிக்கும் ரத்தம், வெடிக்கும் குண்டுகள், இரக்கமற்ற கொலைகள் எல்லாம் அருண் மாதேஸ்வரனின் ஸ்டைல். கேப்டன் மில்லர் திரைப்படம் அருண் மாதேஸ்வரனின் முந்தைய படங்கள் போல் இல்லாமல் ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் குரலாக இப்படம் என்று ட்ரெய்லர் தெரிவிக்கிறது. ஜி.வி.பிரகாஷின் மியூசிக் அட்டகாசம். தனுஷின் ‘நீ யாரு.. உனக்கு என்ன வேணும்ங்குறத பொறுத்து, நான் யாருங்குறது மாறும்’ என தனுஷ் பேசும் வசனம் கவனம் பெறுகிறது. நிறைய கதாபாத்திரங்கள் வந்து செல்கின்றன. தனுஷின் இளமையான தோற்றமும், பிரியங்கா மோகனின் இரண்டு வித்தியாசமான தோற்றங்களும் படம் ஃப்ளாஷ்பேக் கதைகளை உள்ளடக்கிருப்பதை உணர்த்துகிறது. ட்ரெய்லர் (Captain Miller Trailer) மேக்கிங் படத்தின் மீதான ஆர்வத்தை கூட்டுகிறது.

Latest Slideshows

Leave a Reply