Captain Of The Indian Team Kagan Narang : ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் தேர்வு

Captain Of The Indian Team Kagan Narang

ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா வரும் 16ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் இந்த போட்டியின் தொடக்க விழாவை செயின் நதியில் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஒலிம்பிக் வரலாற்றில் மைதானத்திற்கு வெளியே தொடக்க விழா நடக்க இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த தொடக்க விழா அணிவகுப்பு ஆனது 45 நிமிடங்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய அம்சமான வீரர் மற்றும் வீராங்கனைகளின் அணிவகுப்பு ஆனது படகில் நடைபெறவுள்ளது. 200 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

இந்த ஒலிம்பிக் துவக்க விழாவில் இந்திய அணிக்கு தலைவராக துப்பாக்கிச்சுடும் வீரர் ககன் நரங் (Captain Of The Indian Team Kagan Narang) பங்கு பெறுவார். ஆரம்பத்தில் ஒலிம்பிக் அணி தலைவராக மேரி கோம் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது ககன் நரங் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ககன் நரங் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 10 மீ ஏர் ரைபிள் வெண்கலப் பதக்கம் வென்றவர் ஆவார். இந்த ஒலிம்பிக் போட்டிகள் வரும் 26 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 11 ஆம் தேதி வரை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் துவக்க விழாவில் இந்திய அணி சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் மற்றும் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் இணைந்து தேசிய கொடியை ஏந்திச் செல்வர்.

இந்தியாவில் இருந்து இந்த ஒலிம்பிக் போட்டிகளில் 28 தடகள வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். சந்தோஷ் தமிழரசன், பிரவீன் சித்திரவேல், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன் மற்றும் வித்யா ராம்ராஜ் ஆகியோர் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல்முறையாக தமிழ்நாட்டில் இருந்து தடகளத்தில் ஆறு வீரர்கள் தேர்வாகி உள்ளனர். தரவரிசை அடிப்படையில் நீளம் தாண்டுதல் வீரரான ஆல்ட்ரின் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்க தனியாக ஒரு ஒலிம்பிக் கிராமம் ஆனது அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் கிராமத்தில் மொத்தமாக வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் அதிகாரிகள் என 1,42,500 பேர் தங்க உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply