Captain Shukla Is The 2nd Indian To Space : விண்வெளிக்குச் செல்ல தயாராகும் இரண்டாவது இந்தியர் கேப்டன் சுக்லா

Captain Shukla Is The 2nd Indian To Space :

கடந்த 40 ஆண்டுகளில் ராகேஷ் சர்மாவிற்கு அடுத்ததாக கேப்டன் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்னும் பெருமையை பெற உள்ளார்.

Axiom-4 Mission :

Axiom-4 Mission திட்டம் என்பது ISRO – NASA-வின் கூட்டு முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ISRO-வின் மனித விண்வெளி விமான மையம் (Human Space Flight Center), NASA-வினால் அங்கீகரிக்கப்பட்ட Axiom Space Inc., USA நிறுவனத்துடன் இணைந்து கையெழுத்திட்டுள்ள விண்வெளி விமான ஒப்பந்தம் ஆகும். ISRO மற்றும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான NASA இணைந்து செயலாற்றவிருக்கும் கூட்டு விண்வெளி ஆராய்ச்சி திட்டத்திற்காக (Axiom-4 Mission) கேப்டன் சுபான்ஷு சுக்லா (39) மற்றும் குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகிய இரு ககன்யான் விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தேசிய திட்ட ஒதுக்கீடு வாரியம் (National Mission Assignment Board) ஆனது இந்த செய்தியை தெரிவித்திருக்கிறது. விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் இந்தியாவின் முதல் விண்வெளி திட்டமான ககன்யானில் சுக்லா மற்றும் நாயர் ஆகிய இரு விமானிகளும் ஏற்கனவே பங்குபெற்றுள்ளனர். கேப்டன் சுபான்ஷு சுக்லா இந்திய நாட்டின் இரண்டாவது விண்வெளி வீரர் (Captain Shukla Is The 2nd Indian To Space) மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரர் ஆவார். கேப்டன் சுபான்ஷு சுக்லா செல்ல முடியாத நிலை ஏற்படும் எனில் குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் அவர்கள் சுக்லாவிற்கு பதில் மாற்று விண்வெளி வீரராக செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த விண்வெளி நிலையம் செல்லும் வாய்ப்பு ஆனது 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு அமையும் :

  • இந்திய விமானப்படை ஆனது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேப்டன் சுக்லா மற்றும் கேப்டன் நாயருக்கு தனது வாழ்த்துகளை சமூக இணையதளமான X-ல் பதிவிட்டுள்ளது.
  • கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் பாலகிருஷ்ணன் நாயர் ஆகிய இருவரும் இந்தத் திட்டத்தில் பங்குபெறுவதற்காக அடுத்த 8 வாரங்கள் தீவிரமான பயிற்சிகளில் பங்கெடுத்துக்கொள்ள உள்ளனர்.
  • இந்த இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தமான Axiom-4 Mission திட்டமானது கடந்த 2024 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது உருவான திட்டமாகும்.
  • NASA இன்னும் Axiom-4 Mission திட்டம் துவங்கும் தேதியை முடிவு செய்யவில்லை. இருந்தபோதும் இந்த Axiom-4 Mission திட்டம் ஆனது அக்டோபர் 2024-க்கு முன் துவங்கப்படமாட்டாது என இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply