Captain Vijayakanth Passed Away : தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று காலை சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், ஆனால் தற்போது அவர் உயிரிழந்த அதிர்ச்சி தகவலை (Captain Vijayakanth Passed Away) மருத்துவமனை வெளியிட்டுள்ளது. விஜயகாந்தின் ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகரும், தேமுதிக தலைவரும் மற்றும் சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பொது நிகழ்ச்சிகளில் பெரிய அளவில் பங்கேற்காத அவர், ஆண்டுக்கு 2, 3 முறை மட்டுமே தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து வந்தார். விஜயகாந்தின் உடல்நிலை கட்சி தொண்டர்களை மட்டுமின்றி பொதுமக்களையும் கவலையில் ஆழ்த்தியது. மீண்டும் விஜயகாந்த் வருவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில் நவம்பர் 18ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக போரூர் அருகே உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது. இதையடுத்து தேமுதிக பொதுச்செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு, விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Captain Vijayakanth Passed Away :

தொடர்ந்து விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களும் வெளியாகின. ஏறக்குறைய 23 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, கடந்த டிசம்பர் 11-ம் தேதி விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்பினார். இதையடுத்து கடந்த டிசம்பர் 14ம் தேதி தேமுதிக சார்பில் நடந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார். கூட்டத்திற்கு வந்த விஜயகாந்தின் நிலையை கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் விஜயகாந்த் மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக போரூர் அருகே உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் பூரண உடல்நலத்துடன் உள்ளார். பரிசோதனைக்கு பிறகு இன்று (டிசம்பர் 28) வீடு திரும்புவார். என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்துக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று (டிசம்பர் 28) ஆம் தேதி (Captain Vijayakanth Passed Away) உயிரிழந்தார்.

இறுதிச்சடங்கு :

Captain Vijayakanth Passed Away : உடல்நலக்குறைவால் காலமான விஜயகாந்தின் (Captain Vijayakanth Passed Away) இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என்றும், இன்று மதியம் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. வீட்டு வாசலில் காத்திருந்த தொண்டர்கள் விஜயகாந்தின் உடலை பார்த்து கதறி அழுதனர். விஜயகாந்தின் ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மற்றும் கட்சி தலைவர்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply