Carrot Benefits in Tamil: கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள்!

கேரட் என்பது இயற்கையான இனிப்புச் சுவையுடன் அன்றாடம் கிடைக்கும் சத்துக்கள் நிறைந்த மற்றும் மலிவான காய்கறிகளில் ஒன்றாகும். கேரட் நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், சருமத்திற்கு அழகையும் ஒரே நேரத்தில் தரக்கூடியது, இதில் நம் உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட், பொட்டாசியம், வைட்டமின்கள், இரும்பு, கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கேரட்டை முழுவதுமாக சாப்பிட்டு வந்தால் நமது உடலின் பாதுகாப்பை உறுதி செய்யும். உங்கள் பார்வையை மேம்படுத்துவது முதல் புற்றுநோய் செல்களை அழிப்பது, இதய நோயைத் தடுப்பது மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

Carrot Benefits

கண்களுக்கு சிறந்தது

கேரட் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது என்று பலரும் கேள்விப்பட்டிருப்போம், இதற்கு அதில் உள்ள பீட்டா கரோட்டின் தான் காரணம் ஆகும். வைட்டமின் A கண்களை தெளிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது தவிர Lutein மற்றும் Zeaxabthin போன்ற கரோட்டினாய்டுகள் பார்வையை மேம்படுத்துவதோடு, கண்புரை மற்றும் பார்வை இழப்பு போன்ற கண் தொடர்பான நோய்களைத் தடுக்கின்றன. கேரட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்க முடியும்.

குடல் ஆரோக்கியத்திற்கு

கேரட்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது குறிப்பாக கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது நன்மை தரும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டைத் தூண்டுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையால் கஷ்டப்படும் நபர்கள் தினமும் கேரட்டை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம்.

உடல் எடை குறைய

கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் கேரட்டை அனைவரும் தாராளமாகச் சாப்பிடலாம் குறிப்பாக உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கேரட்டை எடுத்துக் கொள்ளலாம். மற்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகளுடன் ஒப்பிடும்போது, ​​கேரட் சாப்பிடும் போது சீக்கிரமாகவே வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும் இரவு நேர பசியால் அவதிப்படுபவர்களுக்கு கேரட் சிறந்த தீர்வாக அமைகிறது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த

கேரட்டில் GI ன் அளவு குறைந்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தயக்கமின்றி கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பிரெட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில், கேரட் சர்க்கரையின் அளவை அதிகரிக்காது எனவே சர்க்கரை நோயாளிகள் அவற்றை அளவோடு சாப்பிடலாம். மேலும் இதில் உள்ள பொட்டாசியம் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளின் செயல்பாடு சீராக செயல்பட உதவுகிறது.

நோய் எதிர்ப்பு திறனை அதிகாரிக்க

கேரட்டில் அதிகம் நிறைந்துள்ள வைட்டமின் A நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இவை இரத்த வெள்ளை அணுக்கள், அதாவது T -செல்களுக்கு உதவுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. கிருமிதாக்கத்தில் இருந்து எதிர்த்துப் போராட இந்த செல்கள் வலுவாக இருக்க வேண்டும். மேலும் இதில் உள்ள வைட்டமின் C நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை துரிதப்படுத்துகிறது.

அழகான சருமம் மற்றும் முடி பாதுகாப்பிற்கு

தினமும் கேரட்டை உட்கொள்வதன் மூலம், பளபளப்பான சருமம் மற்றும் ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம். இதன் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பீட்டா கரோட்டின்கள் சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களில் இருந்து நமது சருமத்தை பாதுகாக்கிறது. குறிப்பாக வைட்டமின் E, முதுமைத் தோற்றமின்றி முதுமையைத் தாமதப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

Latest Slideshows

Leave a Reply