Castor Oil Benefits : விளக்கெண்ணெய்யின் மருத்துவ நன்மைகள்

Castor Oil Benefits : விளக்கெண்ணெயை நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகைப் பொக்கிஷம் என்று சொல்லலாம். காரணம் இதில் இல்லாத நன்மைகளே இல்லை என கூறலாம். இவற்றை பயன்படுத்தும் போது அது ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். இந்த மருத்துவ எண்ணெய் ஆமணக்கு செடியில் இருந்து பெறப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு, இது ஆரோக்கியமான பிரசவத்தைத் தூண்டுவது முதல் மலச்சிக்கல் வரையிலான பண்புகளைக் கொண்டுள்ளது.

இதைப் பயன்படுத்தினால், மலச்சிக்கல், பிரசவத் தூண்டுதல், மூட்டுவலி போன்ற பலவற்றைக் குணப்படுத்தலாம். நுண்ணுயிர் எதிர்ப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு மற்றும் மலமிளக்கி குணங்கள் உள்ளதால் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் அழகு சாதனப் பொருட்களிலும், ஷாம்பு, கண்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. தற்போது அவற்றின் பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

விளக்கெண்ணெய்யின் நன்மைகள் :

Castor Oil Benefits - பிரசவத்தை தூண்டுகிறது :

சில பெண்களுக்கு குறித்து கொடுத்த தேதியிலிருந்து பிரசவம் தாமதமாகிறது. அத்தகைய பெண்களுக்கு விளக்கெண்ணெய் ஒரு சிறந்த தீர்வாகும். இது ஒரு மலமிளக்கியாக இருப்பதால், குடலை முழுவதுமாக சுத்தப்படுத்தி வெளியேற்றும். இதனால் கருப்பையில் எரிச்சல் ஏற்பட்டு அதன் தசைகள் சுருங்கி விரிவடைய ஆரம்பிக்கும். நீங்கள் விளக்கெண்ணெயை உட்கொண்ட 24 மணி நேரத்திற்குள் பிரசவ வலி ஏற்பட வாய்ப்புள்ளது. மருந்தே இல்லாமல் பிரசவ வலியை தூண்டும் பொருள் என்று அழைக்கப்படுகின்றனர். நாட்கள் தள்ளிப் போகும் இரட்டை குழந்தைகள் பிரசவ வலியை கூட தூண்ட உதவுகிறது. இதன் மூலம் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் எந்த பக்க விளைவுகளும் இல்லை. இந்த விளக்கெண்ணெய் முறையை கடைசி மாதம் (41வது வாரம்) முதல் செய்யலாம். இந்த முறையைப் பின்பற்றுவதற்கு முன், உங்கள் மகப்பேறு மருத்துவ நிபுணரை அணுகவும்.

Castor Oil Benefits - சரும வயதாவதை தடுக்க :

நமது சருமம் வயதாவதற்கு முக்கிய காரணம் தோலில் உள்ள செல்கள் சேதமடைவதே ஆகும். இதனால் தோல் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் ஏற்படும். விளக்கெண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும செல்கள் சேதமடையாமல் தடுக்கிறது. எனவே தினமும் காலையில் கண்களைச் சுற்றி, வாய், கன்னம் மற்றும் கழுத்தில் விளக்கெண்ணெய் தடவி 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். பின்னர் சாதாரண நீரில் கழுவவும். உங்கள் தோல் இளமையாக இருக்கும்.

Castor Oil Benefits - பருக்கள் மற்றும் தழும்புகள் மறைய :

இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தழும்புகள் மற்றும் பருக்களை மறைய உதவுகிறது. சுத்தமான காட்டன் துணியை எடுத்து வெதுவெதுப்பான நீரில் நனைத்து அதில் இரண்டு துளிகள் விளக்கெண்ணெய்  சேர்த்து இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவவும். பிறகு காலையில் எழுந்ததும் முகத்தைக் கழுவவும். இவ்வாறு செய்வதால் தழும்புகள் மறையும். கர்ப்பகால ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்யை போக்கவும் இதைப் பயன்படுத்தலாம். விளக்கெண்ணெயில் SPF-6 சூரிய பாதுகாப்பு காரணி உள்ளது. இது சூரிய ஒளியால் சருமம் சேதமடையாமல் தடுக்கிறது. எனவே வெளியே செல்லும் போது விளக்கெண்ணெய் தடவி செல்லவும். இதேபோல், விளக்கெண்ணெய் காயங்களை ஆற்றவும், சேதமடைந்த சரும செல்களை குணப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவுகிறது. உடலில் கொப்புளங்கள், எரிச்சல்கள் இருந்தால் போய்விடும்.

Castor Oil Benefits - சொரியாசிஸ், எக்ஸிமா நீங்க :

இதில் உள்ள ரிச்சினோச் அமிலம் வலி மற்றும் அழற்சியை போக்க கூடியது. இதனால் அரிக்கும் தோலழற்சி மற்றும் சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. சொரியாசிஸ் மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற வறண்ட தோல் நிலைகளுக்கு விளக்கெண்ணெயுடன் சருமத்தை ஈரப்பதமாக்குவதன் மூலம் சரி செய்யலாம். எனவே இரவில் படுக்கும் முன் விளக்கெண்ணையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி தூங்கவும். கேண்டிடா பூஞ்சை தொற்று, மெலாஸ்மா போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது. இதில் உள்ள அன்டர்டிசயினிலிக் அமிலம் படர்தாமரையை நீக்குகிறது. இந்த சொரியாசிஸ் பிறப்புறுப்பு மருக்கள் அதிக உடல் சூட்டில் கூட எளிதில் குணமடையாமல் இருக்கலாம். அதற்கு இந்த விளக்கெண்ணெய் சிறந்த தீர்வாக உள்ளது.

Castor Oil Benefits - மருக்கள் நீங்க :

மருக்கள் மீது தினமும் விளக்கெண்ணெய் தடவி வந்தால், சில நாட்களில் அவை காய்ந்து உதிர்ந்து விடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் ஒரு பல் பூண்டை எடுத்து அதன் மேல் தடவி வர உதிர்ந்து விடும், மேலும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும், விளக்கெண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளால், பொடுகு, செபரோகிக் டெர்மார்ட்டிஷ், பிளவுபட்ட முடி ஆகியவை குணமாகும். ஜொஜோபா மற்றும் கடுகு எண்ணெயுடன் கலந்து முடிக்கு தடவினால் நரை முடி கருப்பாக மாறும் என்று கூறப்படுகிறது.

Castor Oil Benefits - மூலநோய்களுக்கு :

மலத்தை அழுத்தி வெளியேற்றும்போது மலவாய் ஓரத்தில் உள்ள இரத்த நாளங்கள் வீங்கத் தொடங்கும். இது அங்கிருந்து இரத்தப்போக்கு ஆரம்பிக்கும். நீங்கள் மலம் கழிக்கும்போது இரத்தம் வெளியேறத் தொடங்குகிறது. இந்த பைல்ஸ் பிரச்சனையை ஆமணக்கு விதைகள் மற்றும் விளக்கெண்ணெய் மூலம் எளிதில் குணப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இது அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள்தான் இதற்கு  காரணமாகும். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால், அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. வெளிமூலம் மற்றும் உள்மூலம் இரண்டிற்குமே தீர்வு கிடைக்கும். முதலில் அதை வெளிப்புறத்தில் முயற்சிக்கவும். நீங்கள் திருப்தி அடைந்தால், நீங்கள் அதை உட்புறத்தில் எடுத்துக் கொள்வதாக இருந்தால் நல்ல தரமான கலப்படம் இல்லாதவற்றைப் பார்த்து வாங்க வேண்டும். இவ்வாறு பல்வேறு நன்மைகளை கொண்ட விளக்கெண்ணெயை எடுத்துக்கொண்டு பயன்பெறுங்கள்.

Latest Slideshows

Leave a Reply