CavinKare Group's Target 5000 Crore : CavinKare குழுமத்தின் வருவாய் இலக்கு ரூ.5000 கோடி

CavinKare அடுத்த 2 வருடத்திற்குள் வருடத்திற்கு 5000 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை ஈட்டும் நிறுவனமாக உருவெடுக்க வேண்டும் (CavinKare Group’s Target 5000 Crore) என்பதை இலக்காகக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் கடலூரில் உள்ள சிறிய கடற்கரை நகரத்தில் பிறந்த CavinKare-ரின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.சி.கே.ரங்கநாதன் அவர்கள் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இவர் குடும்பத் தொழிலில் சிறிது காலம் ஈடுபட்டுப் பிறகு தனது சொந்த சிக் (Chik) ஷாம்பு தயாரிப்பு வணிகத்தை 1983 இல் ரூ.15,000 முதலீட்டில் தொடங்கினார். இவர் தொடங்கிய சிக் இந்தியா (Chik India) ஆனது 1990 இல் பியூட்டி காஸ்மெட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என மறுபெயரிடப்பட்டு பின்னர் 1998 இல் CavinKare பிரைவேட் லிமிடெட் என பெயரிடப்பட்டுள்ளது.

CavinKare சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. CavinKare நிறுவனம் உணவுப் பொருட்கள், பால் பொருட்கள் மட்டும் அல்லாமல் கூல்டிரிங்ஸ், பர்சனல் பியூட்டி பொருட்கள், சலூன், விலங்குகளுக்கான மருத்துவமனை எனப் பல துறைகளில் சிறப்பாக இயங்கி வருகிறது. உணவுகள் வணிகத்தில், பிரீமியம் வரம்பில் ருச்சி ஊறுகாய் மற்றும் மாஸ்-பிரீமியம் வரம்பில் சின்னிஸ், சின்னியின் வெர்மிசெல்லி, சின்னியின் எனர்ஜி வேர்க்கடலை சிற்றுண்டி மற்றும் ருச்சி மேஜிக் பேஸ்ட்கள் ஆகியவை CavinKare-ன் பிற தயாரிப்புகள் ஆகும். CavinKare பானங்கள் வணிகத்தில், கார்பனேற்றப்படாத பழ பானங்கள் வகையில் மாம்பழம், கொய்யா மற்றும் ஆப்பிள் ஆகியவைற்றை மா பிராண்டாகத் தருகிறது.

CavinKare ஆனது 6000க்கும் மேற்பட்ட ஸ்டாக்கிஸ்டுகள் மூலம் 3 மில்லியனுக்கும் அதிகமான விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் CavinKare வலுவான விநியோக தடத்தைக் கொண்டுள்ளது. 1,700 கோடி ரூபாய் அளவிலான வருடாந்திர வருமான வருவாய் வளர்ச்சி பெற்ற CavinKare குழுமம் ஆனது புதிய மறுசீரமைப்பு மற்றும் புதிய முதலீடுகள் மூலம் அடுத்த 2 வருடத்திற்குள் 5000 கோடி ரூபாய் வரையில் உயர வேண்டும் என தனது இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.

CavinKare Group's Target 5000 Crore - CavinKare குழுமம் வளர்ச்சியை மட்டுமே அடிப்படையாக கொண்டு புதிய மறுசீரமைப்பு 2.0ல் பல திட்டங்களை வகுத்துள்ளது :

  • புதிதாக ரூ.800 முதல் ரூ.900 கோடி அளவிலான முதலீட்டின் மூலம் தொழிற்சாலை, விநியோக நெட்வொர்க், விரிவாக்கம் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்புகள் ஆகியவற்றை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
  • CavinKare குழுமத்தின் கீழ் இருக்கும் Green Trends மற்றும் Limelite சலூன் ஆகியவற்றில் சுமார் ரூ.100 கோடி அளவிலான முதலீட்டைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ‘Unisex சலூன்ஸ்’ என்ற Concept-ஐ பிரபலப்படுத்திய CavinKare குழுமம் Green Trends சலூன் பிரிவின் கீழ், தனிப்பட்ட ஸ்டைலிங் மற்றும் அழகு தீர்வுகளை வழங்குவதில் தெளிவான கவனத்தை செலுத்தி வருகிறது.
  • Dairy பிரிவில் ரூ.400 கோடி அளவிலான முதலீட்டைச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
  • அடுத்த 3 வருடத்தில் SANCHU மருத்துவமனைகள் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

சமூகத்தை ஊக்குவிக்கும் CavinKare-ன் விருதுகள் :

  • சமூகத்தின் சிறந்த மாற்றுத்திறனாளிகளை CavinKare திறன் விருதுகள் மூலம் கௌரவிக்கிறது.
  • புதுமையான யோசனைகள் மற்றும் கருத்துகளுடன் செயல்படும் சிறு நேர தொழில்முனைவோரை சின்னிகிருஷ்ணன் கண்டுபிடிப்பு விருதுகள் மூலம் அங்கீகரித்து ஊக்குவிக்கிறது.

Latest Slideshows

Leave a Reply