Celebrity Cricket League 2025 : செலிபிரிட்டி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சென்னை ரைனோஸ்

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரின் இரண்டாவது (Celebrity Cricket League 2025) அரையிறுதியில் கர்நாடகா அணியை தோற்கடிக்க விக்ராந்த் மற்றும் அஜய் அதிரடியாக விளையாடினர்.

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2025

திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் பிப்ரவரி முதல் நடந்து வருகிறது, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்ற லீக்கில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பெங்கால் டைகர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், சென்னை ரைனோஸ், பஞ்சாப் டி ஷேர் ஆகிய அணிகள் (Celebrity Cricket League 2025) தகுதி பெற்றன. டெஸ்ட் மற்றும் டி20 என இரண்டு முறைகளையும் கலந்து புதிய முறையில் நடத்தப்படும் இந்த தொடரில், நேற்று மைசூரில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில், பெங்கால் டைகர்ஸ் மற்றும் பஞ்சாப் டி ஷேர் அணிகளுக்கு இடையேயான போட்டியில், நடப்பு சாம்பியனான பெங்கால் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

சென்னை ரைனோஸ் vs கர்நாடகா புல்டோசர்ஸ்

Celebrity Cricket League 2025 - Platform Tamil

இதைத்தொடர்ந்து இரண்டாவது அரையிறுதியில் சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி (Celebrity Cricket League 2025) பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் கர்நாடகா அணி 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது, கர்நாடக அணியில் ராஜீவ் அரைசதம் அடித்தார். சென்னை தரப்பில் கலையரசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரமணா 6 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டானார். இதையடுத்து, கேப்டன் விக்ராந்தின் அரைசதத்தால் சென்னை அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தது. கேப்டன் விக்ராந்த் 34 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் இன்னிங்ஸில் கர்நாடகா அணி 6 ரன்கள் முன்னிலை பெற்றது.

சென்னை அணி வெற்றி (Celebrity Cricket League 2025)

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய கர்நாடகா அதிரடியாக விளையாடி ரன் குவித்தது. சென்னை அணி ஃபீல்டிங்கில் சொதப்பியது. இரண்டாவது இன்னிங்ஸில் 123 ரன்கள் எடுத்த கர்நாடகா, சென்னைக்கு 130 ரன்கள் என்ற கடினமான (Celebrity Cricket League 2025) இலக்கை நிர்ணயித்தது. 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய சென்னை அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்ததால், கர்நாடகா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் விக்ராந்த் மற்றும் அஜய் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சென்னை அணி 130 ரன்கள் இலக்கை 2 பந்துகள் மீதமிருக்கையில் எட்டியது. கேப்டன் விக்ராந்த் 22 பந்துகளில் 50 ரன்களும், அஜய் 30 பந்துகளில் அரை சதம் விளாசினர். இந்தப் போட்டிக்கு முன் கர்நாடகா எளிதாக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது, ஆனால் சென்னை ரைனோஸ் அதையெல்லாம் தூள் தூளாக்கியது. இதைத் தொடர்ந்து சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தேர்வானது.

Latest Slideshows

Leave a Reply