சென்னை மாநகரின் மையப்பகுதியில் Central Square

சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள சென்ட்ரல் ரயில் நிலையம் மிகவும் பரபரப்பான இடம் ஆகும்.  சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தினமும் பல லட்சம் பேர் வந்து போயிட்டு இருக்கிறார்கள். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதிய அளவிற்கு இடவசதி இல்லாததால், பயணிகள் மற்றும் பொதுமக்களும் பெரிதும் சிரமப்படுகின்றனர். பொதுமக்களுக்கு இங்கு வாகனங்களை நிறுத்துவது எப்பொழுதும் பெரும் பிரச்சனையாக உள்ளது.

இனி வரும் காலங்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஆனது மிகவும் அதிகரிக்கும். அதனால் இந்த நிலையில் சென்ட்ரல் ரயில் நிலைய பகுதிகளில் பெரிய அளவில் மாற்றங்கள் ஆனது நடந்து வருகின்றன. தற்போது இந்த சென்ட்ரல் ரயில் நிலைய பகுதியில் CMRL நிறுவனம் 27 மாடி கட்டிடம் கட்ட முடிவு செய்துள்ளது.

Central Square - ஒரு குறிப்பு :

சுமார் 400 கோடி ரூபாய் செலவில் மத்திய சதுக்கம் என்ற திட்டம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மத்திய சதுக்கம் (Central Square) என்ற திட்டத்தின் கீழ், சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம், ரிப்பன் கட்டிடங்கள், RGGGH மற்றும் பார்க் ரயில் நிலையம் போன்ற பகுதிகளை இணைக்க ஒரே சுரங்கப்பாதை ஆனது அமைக்கப்படும். பயணிகளுக்கு மல்டிமாடல் பயணத்தை எளிதாக்கும் விதமாக சென்ட்ரல் பிளாசா ஆனது கட்டப்படுகிறது. அதாவது மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் இடையே பயணிகள் எளிதாக மாறும் விதமாக இந்த பிளாசா ஆனது கட்டப்படுகிறது. தற்போது மத்திய சதுக்கம் (Central Square) திட்டத்தின் ஒரு பகுதியாகவே  சுமார் 400 கோடி செலவில் அங்கே பிரம்மாண்ட கட்டிடம் ஆனது கட்டப்பட உள்ளது. ஒரு பெரிய மல்டிலெவல் அண்டர்கிரவுண்ட் வாகன நிறுத்துமிடம் ஆனது 1,650 பைக்குகள் மற்றும் 600 கார்களுக்கு இடமளிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்தும் இடத்திற்கு மேல் பிளாசா ஆனது கட்டப்பட உள்ளது. சில ஆண்டுகளுக்கு  முன்பு தொடங்கப்பட்ட இந்த சதுக்கம்  (Central Square) கட்டிடத்தின் வடிவமைப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது.

முதலில் 33 அடுக்குக் கட்டிடமாக கட்டிட திட்டமிடப்பட்டு பின்னர் அது 31 அடுக்குகளை கொண்ட இரட்டை கோபுர கட்டிடமாக மாற்றப்பட்டது. தற்போது அதிகரித்து வரும் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் வாகனப் போக்குவரத்தை கருத்தில் கொண்டு வடிவமைப்பு 27 மாடிகளாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் அந்த கட்டிடம் இரட்டை கோபுரம் கொண்ட கட்டிடமாக இல்லமால் ஒற்றை கோபுரமாக கட்டிடமாக வர உள்ளதாக கூறப்படுகிறது. இதன் உள்ளே ஹோட்டல்கள், கடைகள், பொருளாதார மையங்கள், பொழுதுபோக்கு மையங்கள் எல்லாம் இடம்பெற்று இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தை தனியார் நிர்வகிக்க உள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அதிகாரிகள் இந்த பிரமாண்டமான கட்டிடத்தை கட்டுவதற்கான டெண்டர் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது பட்ஜெட்டிலும் இதற்கான அறிவிப்புகள் ஆனது வெளியாகி உள்ளது.

Latest Slideshows

Leave a Reply