இந்தியாவின் வெற்றிகரமான தொழில்முனைவோர் - Sun Pharmaceuticals நிறுவனர் மற்றும் CEO Dilip Shanghvi

Sun Pharmaceuticals நிறுவனர் மற்றும் CEO Dilip Shanghvi - உலகின் ஐந்தாவது Largest Drug Company In The World

இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் Sun Pharmaceuticals ஒன்றாகும். Dilip Shanghvi 1983 இல் சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். Sun Pharmaceuticals மருந்து நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO Dilip Shanghvi உள்ளார். இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலி என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் (Bachelor Of Commerce Degree) பெற்றவர். CEO Dilip Shanghvi ஆரம்பத்தில் கல்கத்தாவில் தனது தந்தையின் மொத்த மருந்து விற்பனை வியாபாரத்தில் (Wholesale Dealership Business Of Medicines) உதவி வந்தார். அப்படி உதவி வந்த காலகட்டத்தில் Dilip Shanghvi மற்றவர்கள் தயாரித்த பொருட்களை விற்காமல், தாமே சொந்தமாக மருந்துகளை தயாரிக்க நினைத்தார்.  அவர் தொடர்ந்து தாமே சொந்தமாக மருந்துகளை தயாரிக்க நினைத்து வந்தார். இறுதியாக Dilip Shanghvi தனது முதல் மருந்து உற்பத்திப் பிரிவைத் தொடங்கினார்.

1983-ல் ரூ.10,000/- மூலதனத்துடன் Vapi,  Gujarat-ல் Sun Pharmaceutical Industries தொடங்கினார். 1997-ல் Sun Pharmaceutical Industries நல்ல வளர்ச்சி கண்ட நிலையில் American Company Caraco Pharma நிறுவனத்தை வாங்கியது. 2007 இல் இஸ்ரேலின் Taro Pharma நிறுவனத்தையும் Sun Pharmaceutical Industries வாங்கியது. Sun Pharmaceutical Industries இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனமாக மாறியது. Dilip Shanghvi 2016 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். பொதுமக்களின் மரியாதை பெற்றார். இந்தியாவின் சக்திவாய்ந்த மக்கள் பட்டியலில் 8வது இடத்தை 2017 ஆம் ஆண்டு பெற்றார். Forbes Magazine 18.7 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் CEO Dilip Shanghvi இந்தியாவின் 6வது பணக்காரராக பட்டியலிட்டது. Sun Pharmaceutical Industries உலகின் ஐந்தாவது Largest Drug Company In The World என்ற பெருமை பெற்றுள்ளது

Latest Slideshows

Leave a Reply