CEO Sundar Pichai : Google நிறுவனத்தின் உயர் பதவியில் உள்ள தமிழர்

இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் சுந்தர் பிச்சையின் 20 ஆண்டு Google-ன் பிணைப்பு :

சமீபகாலங்களில் சர்வதேச அளவிலான பிராண்டட் நிறுவனங்கள் (Branded Multinational Companies) இந்தியாவில் தங்கள் நிறுவனங்களை நிறுவுவதில் ஆர்வம் கட்டுவதை போலவே, தங்கள் நிறுவனங்களின் உயர் பதவிகளில் இந்தியர்களை பணியமர்த்துவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்தவகையில் உலகையே ஆட்டி படைத்து வரும் Google நிறுவனத்தின் கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை அலங்கரித்து வரும் நமது 51 வயதே ஆன மதுரைக்கார தமிழர் சுந்தர் பிச்சை (CEO Sundar Pichai) 20 ஆண்டுகள் பணி ஆனது சாதனை நிறைந்ததாகவும் மற்றும் பெருமைமிக்கதாகவும் உள்ளது. மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை சென்னையில் இரண்டு அறைகள் மட்டுமே உள்ள வீட்டில் வளர்ந்தவர். சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்த சுந்தர்பிச்சை, IIT Karakporeல் உலோகப்பொறியியல் படிப்பிலும் மற்றும் மேலாண்மைப் பட்ட படிப்பிலும் பட்டம் பெற்றார். உதவித்தொகை பெற்று வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் மேலாண்மை பயின்றார்.

சுந்தர் பிச்சை பணி - 2004 முதல் 2024 வரை :

சுந்தர் பிச்சை (CEO Sundar Pichai) Google நிறுவனத்தில் PRODUCT MANAGER ஆக 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி பணியில் அமர்ந்தார். Google Chrome மற்றும் Android ஆகியவை சுந்தர் பிச்சையின் மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல், Google-ளுக்கு வருமானம் ஈட்டித்தரும் Google Search, Google Maps, Google Ads, Youtube உள்ளிட்ட தயாரிப்புகளிலும் சுந்தர்பிச்சையின் பங்களிப்பு பெரிதாக இருந்ததால் Google நிறுவனத்தின் தலைமையின் கவனத்தை பெற்றார்.

சுந்தர்பிச்சையின் அபார திறமைசாலித்தனம் நிறுவனத்திற்கு நல்ல வருமானம் பெற்றுத் தந்ததால் அவரால் தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முடிந்தது. 2019 ஆம் ஆண்டு முதல் Google-ன் தாய் நிறுவனமான Alphabet நிறுவனத்தின் தலைவர்களாக இருந்த Larry Page மற்றும் Sergey Brin ஆகியோர் விலகிய நிலையில், சுந்தர் பிச்சை இரு நிறுவனங்களுக்கும் ஒரே தலைமை செயல் அதிகாரியாக பதவியை அலங்கரித்து வருகிறார். 2022 ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை (CEO Sundar Pichai) 226 மில்லியன் அமெரிக்க டாலர்களை (அதாவது ஆயிரத்து 854 கோடி ரூபாய்) ஊதியமாக Google நிறுவனத்திடமிருந்து பெற்றார்.

CEO Sundar Pichai - 20 ஆண்டுகள் பணி பற்றி இன்ஸ்டா பக்கத்தில் சுந்தர் பிச்சையின் பதிவு :

சுந்தர் பிச்சை (CEO Sundar Pichai) Google நிறுவனத்தில் தனது 20 ஆண்டுகள் பணி நிறைவடைந்ததைப் பற்றி இன்ஸ்டா பக்கத்தில், “Google நிறுவனத்தில் சேர்ந்த நாளில் இருந்து எனது வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. பலவிதமான தொழில்நுட்ப மாற்றங்களை கண்டதைப்போல எனது தலைமுடியும் பல மாற்றங்களை கண்டுள்ளது.  இருந்தபோதும் எனக்கு எனது வேலை மீதான காதலும் மற்றும் ஆர்வமும் மாறாமல் அப்படியே உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். படித்து முடித்து வெளியே வரும் இளைஞர்கள் சுந்தர் பிச்சை போன்ற சாதித்தவர்களை உதாரணமாகக்கொண்டு, தனக்கென உள்ள பாணியில் தனித்துவமாக பணியை திறம்பட செய்து பெரிய பதவிகளை அலங்கரிக்க வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply