Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது வரும் பிப்ரவரி 19-ம் தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஹைப்ரிட் மாடல் முறையில் துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடக்கும் இந்த தொடரில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து முதலிய 8 அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் இந்திய அணியின் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை (Champions Trophy 2025) பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.        

இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரானது 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ள நிலையில் குரூப் A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளும், குரூப் B பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் முதலிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஐசிசி அறிவிப்பு

இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் நாடுகள் 15 பேர் கொண்ட வீரர்களின் இறுதி பட்டியலை ஜனவரி 12-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி (ICC) தெரிவித்திருந்த நிலையில், இந்திய அணி மட்டும் கால அவகாசமாக ஜனவரி 18 ஆம் தேதி கேட்டிருந்தநிலையில் தற்போது ரோகித் ஷர்மா தலைமையிலான (Champions Trophy 2025) இந்திய அணியின் பட்டியலை பிசிசிஐ (BCCI) அறிவித்துள்ளது.

15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியல் (Champions Trophy 2025)

இந்த பட்டியலில் ரோகித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் (துணை கேப்டன்), ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, பும்ரா ஆகியோர் (Champions Trophy 2025) இடம்பெற்றுள்ளனர். மேலும் பும்ராவின் உடல்நிலை சீராகும் வரை இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியில் ஹர்ஷித் ராணா இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர்

பும்ராவின் உடற்தகுதிக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் (Champions Trophy 2025) நடைபெறுவதற்கு முன் பிசிசிஐ-யின் மருத்து குழுவிடம் இருந்து பும்ராவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை நாங்கள் பெற்றுக்கொள்வோம் எனவும், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராகவும், கே.எல்.ராகுல் பேட்ஸ்மேனாகவும் செயல்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply