Chandramukhi 2 Audio Launch : சந்திரமுகி 2 படத்தின் இசைவெளியீட்டு விழா...

Chandramukhi 2 Audio Launch :

நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு லைக்கா நிறுவனர் சுபாஷ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி ஆகும். இப்படம் ஷோபனா நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மலையாள திரைப்படமான மணிசித்ரத் தாழ் படத்தின் ரீமேக்காக உருவானது. ஆனால் பி.வாசு தமிழ் ரசிகர்களுக்காகவும் ரஜினிகாந்துக்காகவும் படத்தில் பல மாற்றங்களைச் செய்திருந்தார். ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட், மிரட்டல் என பல்வேறு அம்சங்கள் படத்தில் அதிகமாக காணப்பட்டன. இந்த படம் சூப்பர் ஹிட்டானது. சமீப காலமாக ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சந்திரமுகி இரண்டாம் பாகமும் உருவாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு பதிலாக நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் என கோலிவுட்டில் பன்முகம் கொண்ட ராகவா லாரன்ஸ் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். இந்தப் படம் தொடங்கும் முன் நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் லாரன்ஸ். இந்நிலையில் இப்படம் தற்போது முழுவதுமாக முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

சந்திரமுகி 2 திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்க, வடிவேலு, லட்சுமி மேனன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூர் ஹைதராபாத் மற்றும் பல இடங்களில் பிரமாண்டமான அரண்மனைகளில் நடந்து முடிந்துள்ளது. ஆஸ்கர் நாயகன் எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் தொடர்ந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா (Chandramukhi 2 Audio Launch) சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

Chandramukhi 2 Audio Launch : இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், இந்த படம் ஆரம்பம் முதலே தலைவர் ரஜினிகாந்தின் ஆசியுடன் தான் படம் நடந்தது என்றும், தலைவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றதாகவும் கூறினார். மேலும், இசை வெளியீட்டிற்கு முன்பு அவரிடம் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் பிரமாண்ட வேட்டைக்காரன் கேரக்டரில் நடிக்கும் போது பயமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சந்திரமுகி படத்தில் வேட்டைக்காரன் கேரக்டரில் ரஜினி நடித்திருந்த நிலையில், அந்த கேரக்டரில் நடிக்கும் போது அவரது பெயர் கெட்டுவிடுமோ என்று பயமாக இருந்தது. சூப்பர் ஸ்டாரின் ஆசியுடன் படம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக கூறிய லாரன்ஸ், ரஜினிகாந்துக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் படத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply