Chandramukhi 2 First Single: சந்திரமுகி 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு...

நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு கங்கனா ரணாவத், லட்சுமி மேனன் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’ ஆகும். விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகவுள்ள இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே இயக்கியுள்ளார். முன்னதாக படத்தின் போஸ்டர்கள் வெளியாகி மிரட்டிய நிலையில், தற்போது படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி ஆகும். நடிகர் ரஜினிகாந்த் மட்டுமின்றி படத்தின் அனைத்து நடிகர்களும் இந்த படம் சிறப்பாக கைகொடுத்தது. இப்படம் ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரட்டாக அமைந்தது. இப்படத்தில் ஜோதிகா சந்திரமுகியாக மிரட்டிய நிலையில், நயன்தாரா துர்காவாக ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். ரஜினியும் இந்தப் படத்தில் வடிவேலுவுக்கு ஈடாக நின்று நகைச்சுவை கலாட்டா செய்து கலக்கினார். நகைச்சுவை, அதிரடி, மிரட்டல், சென்டிமென்ட் என அனைத்திலும் ரசிகர்களைக் வெகுவாக கவர்ந்தது. இப்படத்தை பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கியிருந்தார். இப்படம் ரஜினியின் கேரியரில் சிறந்த படமாக அமைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை லைக்கா தயாரிப்பில் பி.வாசு இயக்குகிறார்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் திரைப்படமாக சந்திரமுகி 2 வெளியாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு, படத்தின் பாடல் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு சென்ற புகைப்படங்களை மஹிமா தனது இணையதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூர், ஹைதராபாத் போன்ற இடங்களில் உள்ள அரண்மனைகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் ப்ரமோஷனை படக்குழு சிறப்பாக நடத்தி வருகிறது. ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Chandramukhi 2 First Single :

இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடலை (Chandramukhi 2 First Single) லைகா நிறுவனம் நேற்று தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஜோதிகா முதல் பாகத்தில் ரா ரா சரசகு ராரா பாடியது போல் இந்த பாகத்திலும் ரசிகர்களை மயக்கும் பாடல் உள்ளது. இந்த படத்தின் அனைத்து பாடல்களுக்கும் ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி இசைமைப்பில், அனைத்து பாடல்களும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியான ‘ஸ்வகதாஞ்சலி’ பாடல் சந்திரமுகியின் அழகையும் நடனத்திறமையும் சித்தரிக்கும் செவ்வியல் மெல்லிசை ஆகும். இதை ஸ்ரீநிதி திருமலா பாடியுள்ளார். பாடல் வரிகளை சைதன்ய பிரசாந்த் எழுதியுள்ளார். இந்த பாடலில் கங்கனா இளவரசி லுக்கில் காணப்படுகிறார். இதில் ஏராளமான துணை நடிகைகளுடன் அழகாக அரண்மனையில் ஆடுகிறார். லிரிக் வீடியோவின் இடையில் ராகவா இளவரசன் கெட்டப்பில் வருகிறார். படைவீரர்களுடன் சண்டை செய்யும் காட்சி மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Latest Slideshows

Leave a Reply