Chandramukhi 2 Release Date Changed : சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

Chandramukhi 2 Release Date Changed :

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி (Chandramukhi 2 Release Date Changed) கடைசி நேரத்தில் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 2005ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் நயன்தாரா, வடிவேலு, ஜோதிகா, மாளவிகா, நாசர், பிரபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. தற்போது 18 வருடங்களுக்கு பிறகு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். சந்திரமுகி 2 என்று பெயரிட்டிருந்தாலும், வடிவேலுவைத் தவிர முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகைகள் யாரும் படத்தில் பணியாற்றவில்லை. ஆனால், அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் உள்ள ஒரே தொடர்பு வடிவேலு தான். இயக்குனர் பி.வாசு சமீபத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவரது கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக வைத்து இந்த இரண்டு கதைகளுக்கும் ஒரு தொடர்பை கொடுத்துள்ளதாக கூறியிருந்தார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடிக்கிறார். அதேபோல் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி கேரக்டரில் நடித்துள்ளார்.

சந்திரமுகி 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் மரகதமணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி வரும் செப்டம்பர் 15ஆம் தேதி சந்திரமுகி 2 வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி (Chandramukhi 2 Release Date Changed) அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. படத்தின் VFX பணிகள் முடிவடையாததால் படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. இப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி ரேஸில் இருந்து சந்திரமுகி 2 வெளியேறிய நிலையில், விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மன கஷ்டத்தில் உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply