Chandramukhi 2 Release Date: விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் சந்திரமுகி-2
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன் திரைப்படம் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. பிரியா பவானி சங்கர் இத்திரைப்படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ருத்ரன் திரைப்படம் வெளியாகி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவதால், ராகவா லாரன்ஸ் மற்றும் தயாரிப்பாளர், இயக்குனர் கதிரேசன் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்களுடன் பேசிய லாரன்ஸ் :-
இந்நிலையில் சமீபத்தில் லாரன்ஸ் மதுரையில் உள்ள செல்லூர் திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து ருத்ரன் திரைப்படத்தை பார்த்தார். பின்னர் அங்கு பேசிய அவர் தாய் பாசத்தால் தான் ருத்ரன் படத்தில் நடித்தேன். குடும்பம் குடும்பமாக ருத்ரன் படத்தை பார்க்க வருகிறார்கள். இதனை மாஸ் படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி கூறினார். செல்போனுக்கு கொடுக்கும் மரியாதை கூட “தாய்களுக்கு” தருவதில்லை என்று நான் இந்த படத்தில் பேசிய வசனம் பெரிய அளவில் ரசிகர்களுக்கு சென்றுள்ளது. இந்த படத்தை பார்த்துவிட்டு நிறைய தாய்மார்கள் எனக்கு செல்போனில் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நான் அதிகமாக குடும்பங்களுடன் இணைந்திருப்பேன் என் திரையுலக வெற்றிக்கு குடும்ப படங்களே காரணமாகும். விமர்சனம் அனைத்து படத்திற்கும் வருகிறது விமர்சனம் என்பது தனிநபர் விமர்சனமாக இருக்கக்கூடாது. ஒரு படம் எடுக்கும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். அதில் சில தவறுகள் ஏற்பட்டால் அது குற்றமாகாது. எவ்வளவு விமர்சனம் செய்தாலும், இத்திரைப்படம் திரையரங்கில் வசூலை வாரி குவித்து வருகிறது. பலரின் விமர்சனத்திற்கு இதுவே பதிலடியாகும்.
சந்திரமுகி 2 விரைவில் :-
ஜிகர்தண்டா 2, சந்திரமுகி 2 ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து விட்டன. இனிமேல் இடைவெளி இல்லாமல் திரைப்படங்கள் வெளியாகும்.
சந்திரமுகி திரைபடம் 2005 இல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக உள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் கங்கனா ரணாவத் கதாநாயகவும் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் பி.வாசு இயக்கியுள்ளார்.
சந்திரமுகி முதல் பாகத்தில் அரண்மனையில் நடக்கும் அமானுஷிய காட்சிகள் இருந்தன. இரண்டாம் பாகம் இதனை தொடர்ந்து இருக்குமா அல்லது வேற காட்சிகள் இடம் பெருமா என்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் இடத்தில நிலவுகிறது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தை விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் பேசிய லாரன்ஸ் கடவுளின் அருள் இருந்தால் விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.