Chandramukhi 2 Third Single : சந்திரமுகி 2 படத்தின் ‘தோரி போரி' பாடல் வெளியீடு

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தின் ‘தோரி போரி’ பாடல் (Chandramukhi 2 Third Single) வெளியாகி உள்ளது.

சந்திரமுகி 2 :

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டு வருகிறது. ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், ராதிகா, வடிவேலு, மஹிமா, லட்சுமி மேனன், சுபிக்ஷா நடித்துள்ள சந்திரமுகி 2 தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்தப்படத்துக்கு RRR படத்துக்கு ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டி.ஆர்.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் இருந்து ஏற்கனவே பாடல்கள் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது படத்தின் அடுத்த பாடலாக ‘தோரி போரி’ (Chandramukhi 2 Third Single) வெளியாகியுள்ளது.

Chandramukhi 2 Third Single - 'தோரி போரி' பாடல் :

இந்நிலையில் சந்திரமுகி அரண்மனையில் ராகவா லாரன்ஸ் குடும்பத்துடன் இருக்கும் ‘தோரி போரி’ பாடல் (Chandramukhi 2 Third Single) வெளியாகியுள்ளது. 

“யாதும் இங்கே ஊரே என்றால், எல்லைக் கோடே நீளாதையா” மற்றும் “தேங்காமல் நதி போலே ஓடு அன்னை அவள் அன்பு முகத்தில் ஆண்டவனை கண்டிடலாமே” என்ற வரிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. யுகபாரதி பாடல் வரிகளை எழுதியுள்ளார், கீரவாணி இசையில் ஹரிசரண் பாடியுள்ளார். படத்தின் முதல் சிங்கிள் ‘ஸ்வகதாஞ்சலி’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் நடித்த கங்கனா ரனாவத் பாடலுக்கு ஏற்றாற்போல் நடனமாடியும் அசத்தியிருப்பார். இந்நிலையில் ‘தோரி போரி’ பாடல் (Chandramukhi 2 Third Single) தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சந்திரமுகி 2 திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஷாருக்கானின் ஜவான் படத்தின் வரவேற்பு திரையரங்கில் கிடைத்தாலும் மற்றும் விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் ரிலீசாலும் சந்திரமுகி 2 படத்தை வரும் 28ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2005ல் வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்தில் ரஜினி நடித்திருந்தார். இப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இப்படம் வேட்டையன் மன்னன் மற்றும் சந்திரமுகி கதையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply