Chandramukhi 2 Trailer Launch : சந்திரமுகி 2 ட்ரைலர் வெளியீட்டு விழா அறிவிப்பு

Chandramukhi 2 Trailer Launch :

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சந்திரமுகி 2 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா (Chandramukhi 2 Trailer Launch)  இன்று நடைபெற உள்ளது.

இயக்குனர் பி.வாசு இயக்கிய “சந்திரமுகி” மாபெரும் வெற்றி பெற்றது. நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர், வினீத் மற்றும் பலர் நடித்த சந்திரமுகி படம் பட்டிதொட்டி எல்லா இடங்களிலும் ஹிட் கொடுத்தது. குறிப்பாக ஜோதிகாவின் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்தது என்றே சொல்லலாம். சந்திரமுகியில் ரஜினி-வடிவேலு காமெடி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆனது. வித்யாசாகர் இசையமைத்த பாடல்களும் ஹிட் ஆகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சந்திரமுகி படத்தை இயக்கிய பி.வாசு தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கிறார். வடிவேலு, மகிமா நம்பியார், ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன், ராதிகா லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சந்திரமுகி 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் அப்டேட்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் வேட்டை மன்னனின் கதாபாத்திரம் வெளியிடப்பட்டது. சந்திரமுகியின் தோற்றம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் பாடலாக “ஸ்வகதாஞ்சலி” பாடல் வெளியிடப்பட்டது. ஸ்ரீநிதி திருமலா பாடிய இந்தப் பாடலை சைதன்ய பிரசாத் எழுதியிருந்தார். இதனையடுத்து மொருனியே பாடல் வெளியானது. இந்த கேட்கும் போது RRR பாடல்தான் நினைவுக்கு வருவதாக பலரும் தெரிவித்தனர். இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் ட்ரைலர் (Chandramukhi 2 Trailer Launch) இன்று (செப்டம்பர் 3) வெளியாகிறது. ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று சந்திரமுகி 2 படத்தைத் தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இது தொடர்பாக வீடியோ (Chandramukhi 2 Trailer Launch) ஒன்று வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply