Chandramukhi 2 Trailer : சந்திரமுகி 2 படத்தின் ட்ரைலர் வெளியீடு...

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே சந்திரமுகி 2 படத்தின் ட்ரைலர் (Chandramukhi 2 Trailer) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. நாசர், ஜோதிகா, வடிவேலு, பிரபு மற்றும் நயன்தாரா நடித்த சந்திரமுகி திரையரங்குகளில் அதிக நாள் ஓடி மாபெரும் சாதனை படைத்தது. பேய் கதையாக இருந்தாலும் நகைச்சுவை, பாடல், த்ரில்லர் என முழுக்க முழுக்க ரசிக்கும்படியாக படத்தை கொடுத்துள்ளார் பி.வாசு. பிரமாண்டமும், ஒளிப்பதிவும் மற்றும் நகைச்சுவை ஆகியவை குழந்தைகளின் விருப்பமான திரைப்படமாக சந்திரமுகி இருந்தது. இப்படத்தில் வடிவேலு மற்றும் ரஜினியின் நகைச்சுவையும், கங்கா, சந்திரமுகியாக ஜோதிகாவின் மிரட்டலும் கைதட்டல்களைப் பெற்றன.

Chandramukhi 2 Trailer :

இந்நிலையில் சந்திரமுகி 2 படம் 17 வருடங்களுக்கு பிறகு எடுக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, கங்கனா ரனாவத் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. வரும் 15ம் தேதி படம் வெளியாகும் நிலையில் படத்தின் ட்ரைலர் (Chandramukhi 2 Trailer) தற்போது வெளியாகியுள்ளது.

மாபெரும் அரசனுக்கே உரித்தான வரவேற்பு மாலையின் பின்னணிக்குரலில்,
ராஜாதி ராஜா…
ராஜ கம்பீரா…
ராஜா மார்த்தாண்ட…
ராஜா குலதிலக வேட்டயன் ராஜா வரார்…வரார்…

என வசனத்துடன் ட்ரைலர் தொடங்குகிறது. படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமாக பார்க்கப்படும் பாம்பு தண்ணீரில் இறங்குகிறது. ஆந்தை, சந்திரமுகியின் அறை கதவு என அடுத்தடுத்த காட்சிகளில் நகரும் ட்ரைலர், ராகவா லாரன்ஸின் மாஸ் அறிமுகத்தில் நிற்கிறது. படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது ட்ரைலர். அந்த வகையில் முக்கிய கதாபாத்திரமான முருகேசன் (வடிவேலு) அறிமுகமாகிறார்.

தயவு செய்து தெற்கு பக்கம் மட்டும் போக வேண்டாம் என ஆர்.எஸ்.சிவாஜி எச்சரிக்க, சந்திரமுகியாக கங்கனா ரணாவத், கதாபாத்திரத்திற்கு ஏற்ற பரதநாட்டியக் கலையுடன் அறிமுகமாகிறார். அதன்பிறகு வேட்டையன் வேடத்தில் வரும் ராகவா லாரன்ஸ் கதாபத்திரத்திற்கு உரித்தான நக்கல் கலந்த அரக்கத்தனம் கொண்டு வருகிறார். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் அறிமுகமாவது பிரமிக்க வைக்கிறது. கடைசியாக வடிவேலு ரிப்பீட் 17 வருஷம் என்று சொல்லி ட்ரைலர் (Chandramukhi 2 Trailer) முடிகிறது. முதல் பாகத்தைப் போலவே பிரமாண்டமும், த்ரில்லர் காட்சிகள் இருக்கும் என பலரும் விமர்சித்து வருகின்றனர். கீரவாணியின் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. 200 ஆண்டு கால பகையை தீர்த்து கொள்வாரா சந்திரமுகி என்பதை வரும் 15 ஆம் தேதி பார்க்க ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply