Chandrayaan 2 Finds High Density In Moon : நிலவு பூமிக்கு நெருக்கமாக வரும்போது அதன் மின்னணு அடர்த்தி அதிகரிப்பதை சந்திரயான் 2 விண்கலம் கண்டுபிடித்துள்ளது

நிலவு பூமிக்கு அருகில் வரும்போது அதன் மின்னணு அடர்த்தி அதிகரிக்கிறது என்பதை சந்திரயான் 2 விண்கலம் (Chandrayaan 2 Finds High Density In Moon) கண்டுபிடித்திருக்கிறது. எப்போதும் இறந்து போன கிரகத்தில்தான் மின்னணு அடர்த்தி குறைவாக இருக்கும். அந்த வகையில் பார்த்தால் நிலவுக்கு நமது பூமி உயிர் கொடுப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் வரும் நாட்களில் மனிதர்கள் நிலவில் தரை இறங்கும்போது எந்த சிக்கலும் இல்லாமல் அவர்களை பாதுகாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “நிலவு பூமிக்கு நெருக்கமாக வரும் நாட்களில் அதன் மின்னணு அடர்த்தி அதிகரிக்கிறது, இதை ஆய்வு செய்வதன் மூலமாக நிலவில் நாம் எந்த மாதிரியான மின்னணு கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று ஒரு புரிதல் நமக்கு உருவாகும்” என தெரிவித்துள்ளது. நாம் நிலவுக்கு அனுப்பிய சந்திரயான்-2 என்ன கண்டுபிடித்தது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் நாம் சில அடிப்படையான விஷயங்களை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

காந்த வளையம்

நமது பூமி கண்களுக்கு தெரியாத காந்த வளையத்தால் (Magnetic Field) சூழப்பட்டிருக்கிறது. மேலும் சூரியனிலிருந்து வெளிவரும் சூரியக் காற்றிலிருந்து இந்த காந்த வளையம் நம்மை பாதுகாக்கிறது. ஒருவேளை பூமியை சுற்றி காந்த வளையம் இல்லையெனில், சூரிய காற்றானது (Chandrayaan 2 Finds High Density In Moon) கம்ப்யூட்டர் முதல் செல்போன், செயற்கைக்கோள்கள் வரை அனைத்து மின்னணு கருவிகளையும் முழுவதுமாக பாதிப்படைய செய்யும்.

நிலவின் மின்னணு அடர்த்தி (Chandrayaan 2 Finds High Density In Moon)

Chandrayaan 2 Finds High Density In Moon - Platform Tamil

காந்த வளையம் பாதிப்படையும்போது பூமிக்கு பின்னால் வால் போன்ற ஒரு அமைப்பை உருவாக்குகிறது. ஒவ்வொரு மாதத்திலும் 4 நாட்கள் பூமியின் காந்த வால் பகுதிக்கு நிலவு வரும். அப்படி வரும்போது நிலவின் மின்னணு அடர்த்தி 23,000 கன செ.மீ என்ற அளவில் உயருகிறது. இது வழக்கமான மின்னணு அடர்த்தியை விட 100 மடங்கு அதிகமாகும். இதை ரேடியோ ஒக்கல்டேஷன் பரிசோதனை (Radio Occultation Experiment) என்ற முறையை பயன்படுத்தி சந்திரயான் 2 விண்கலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சந்திரயான் 2 விண்கலத்தின் (Chandrayaan 2 Finds High Density In Moon) ஆர்பிட்டர் S-Band ரேடியோ சிக்னல்களை நிலவை நோக்கி அனுப்பியுள்ளது. இந்த சிக்னல் நிலவின் மின்சுற்று வழியாக சென்றபோது மாற்றங்கள் தெரிந்திருக்கின்றன. இந்த மாற்றத்தை Indian Deep Space Network மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்தியா புதிய சாதனை

இந்தியாவின் சார்பில் இதுவரை யாரும் நிலவுக்கு செல்லவில்லை. ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் இதனை நாம் சாதிக்க தயாராகி வருகிறோம். நிலவுக்கு மனிதர்கள் செல்வது சுலபமான காரியம் இல்லை. நிலவில் மனிதர்கள் தரையிறங்கும்போது (Chandrayaan 2 Finds High Density In Moon) அங்கு அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும். மேலும் எலக்ட்ரானிக் பொருட்கள் எதுவும் டேமேஜ் ஆகக்கூடாது. இதற்கு முதலில் நிலவின் மின்னணு அடர்த்தி பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் தற்போது சந்திராயன் 2-ன் கண்டுபிடிப்பானது மிகுந்த பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply