Chandrayaan-3 Captures First Images : பூமி மற்றும் நிலவை புகைப்படங்கள் எடுத்து அனுப்பிய சந்திராயன் 3...

Chandrayaan-3 Captures First Images :

நிலவின் தென் முனையில் உள்ள பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்யும் நோக்கத்தில் அடிப்படையில் சந்திராயன் 3 என்னும் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.  இந்த ஆய்விற்காக இந்த விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணிற்கு செலுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக சந்திராயன் இரண்டு கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. அது தன்னுடைய இலக்கை முழுமையாக அடையாமல் மறைந்து போனது. இதில் நாடு முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவே சோக மழையில் நனைந்தது. இதனால் இந்த ஆண்டு நிச்சயம் சாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சந்திராயன் 3 களம் இறக்கப்பட்டது. இது படிப்படியாக நிறைய கட்டங்களை அடைந்து சுற்றுவட்ட பாதையை சென்றடைந்தது.

மேலும் கொஞ்சம் கொஞ்சமாக சந்திராயன் 3 நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு அருகில் சென்றது. மீண்டும் இரண்டாவது கட்டமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அதன் வட்டப்பாதையில் அளவை குறைத்தனர். இதற்கு முன்னதாக அதிகபட்சமாக 170 கிலோமீட்டர் தொலைவில் நிலவை சுற்றி வந்தது. அதிகபட்ச தொலைவாக 4314 கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வந்திருக்கிறது.

இந்த நிலையில் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இயங்கிக் கொண்டிருக்கும் சந்திராயன் 3 விண்கலத்தின் தொலைவை மேலும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி அதன் தொலைவை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து 100 கிலோ மீட்டருக்கும் குறைவாக விண்கலத்தை கொண்டு செல்வது தான் அடுத்த கட்ட நகர்வு ஆகும். இது மட்டுமல்லாமல் சந்திராயன் 3 விண்கலத்தின் பயணம் சரியாக திட்டமிட்டபடி சென்று கொண்டிருக்கிறது. இதேபோன்று திட்டமிட்டபடி விக்ரம் லேண்டர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நிலவில் தன்னுடைய கால் தடத்தை பதிக்கும் என்று இஸ்ரோ தலைவர் திரு.சோம்நாத் அவர்கள் கூறியுள்ளார்.

விக்ரம் லேண்டர் தரையிறக்கம் :

வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்ட நிலையில் சந்திராயன் 3 இப்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பூமி மற்றும் நிலவின் புகைப்படங்களை தற்போது எடுத்து அனுப்பி உள்ளதாக (Chandrayaan-3 Captures First Images) இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். நிலவில் தரையிறங்க இருக்கும் லேண்டரின் கீழ்பகுதியில் உள்ள கேமரா மூலம் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது. புகைப்படத்தில் நிலவில் உள்ள பள்ளம் மற்றும் எரிமலைகளால் நிரப்பப்பட்ட சமவெளிகள் ஆகியவற்றை மிகவும் துல்லியமாக படம் பிடித்து காட்டியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply