Chandrayaan 3 Lander: சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து இன்று வெளியேறும் லேண்டர்

லேண்டர் சாதனமாது சந்திராயன்-3 விண்கலத்தில் இருந்து இன்று வெளியேறுகிறது. நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் கடைசி கட்ட தூரம் குறைப்பு முயற்சி நேற்று வெற்றிகரமாக நடந்தது. இதையடுத்து, விண்கலமானது நிலவின் அருகே அடைந்துள்ளது.

லேண்டர் சாதகமானது விண்கலத்தில் இருந்து (ஆகஸ்ட் 17) இன்று வெளியேற உள்ளது. சந்திரயான்-3 சந்திரனை ஆய்வு செய்வதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14 அன்று ஏவப்பட்டது. அதன் செயல்பாடுகளை ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து நிலவு சுற்றுப்பாதையில் நுழைந்து சந்திரனைச் சுற்றி வந்தது. இதற்கிடையில் சுற்று தூரம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதுவரை, இந்த தூரம் நான்கு முறை குறைக்கப்பட்டு, ஐந்தாவது மற்றும் கடைசி கட்ட இறக்கம் நேற்று வெற்றிகரமாக நடந்தது.

இதற்குப் பிறகு, சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள ‘புரபல்ஷன் மாட்யூல்’ எனப்படும் உந்து கலத்தில் இருந்து ‘லேண்டர்’ எனப்படும் நிலவில் தரையிறங்கும் சாதனம் இன்று பிரிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து சந்திராயன்-3 விண்கலமானது நிலவை சுற்றிவந்து ஆய்வு செய்யும். அதே சமயம் நிலவின் தென் துருவத்தில் வரும் 23ம் தேதி லேண்டர் தரையிறங்க திட்டமிட்டுள்ளது. இந்த லேண்டர் சாதனத்தின் உள்ளே ‘ரோவர்’ எனப்படும் நிலவில் தரையிரங்கி ஆய்வு செய்யும் வாகனம் இடம்பெற்றுள்ளது.

லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, ரோவர் வாகனம், நிலவின் மேற்பகுதியில் சுற்றி வந்து ஆய்வு செய்யும். இவ்வாறு அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Latest Slideshows