Chandrayaan 3 Launch Countdown: விண்ணில் பாயத் தயாராக இருக்கும் சந்திராயன் 3 விண்கலம்

சந்திராயன் 3 விண்கலம் வரும் ஜூலை 14 ஆம் தேதி மதியம் 2:35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது, மேலும் அதற்கான கவுண்ட் டவுன் இன்று 13/07/2023 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து தொடங்க உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலம் விண்வெளியில் ஏவப்பட்ட நிலையில், அடுத்ததாக சந்திராயன் 2, 2019 ஆம் ஆண்டு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதில் சந்திரயான் 1 வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. சந்திராயன் 2 தோல்வியடைந்தது. சந்திராயன் 2 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதியது.

இந்நிலையில் சந்திரயான்-2 விண்கலத்தைத் தொடர்ந்து, சந்திராயன்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்கும் மற்றும் உலாவுதல் திறனுடன் விண்ணில் செலுத்தப்டுள்ளது. சந்திராயன் 3-யை பொறுத்தவரை லேண்டர் மற்றும் ரோவர் அமைப்பைக் கொண்டுள்ளது. நிலவின் மேற்பரப்பை, குறிப்பாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இது உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரயான் 3 ஏவுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொழில்நுட்ப சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூலை 14-ம் தேதி சந்திராயன் 3 விண்ணில் ஏவப்படும். இதற்கான கவுன்டவுன் வியாழக்கிழமை இன்று முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரயான் 3 விண்கலத்தை பொறுத்தவரை அது சரியாக தரையிறங்கவில்லை என்றால் என்ன செய்வது, எரிபொருள் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்பன உள்ளிட்ட எந்தெந்த வகையில் தோல்விகள் ஏற்படுமோ ஆகிவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்வு காணும் வகையில் சந்திராயன் 3 தயாரிக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். சந்திராயன் 3 விண்கலத்தில் அதிக எரிபொருள் நிரப்பும் வசதி உள்ளது மற்றும் விக்ரம் லேண்டரில் கூடுதல் சோலார் பேனல்கள் இணைக்கப்பட்டுள்ளதாக சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply