Chandrayaan 3 Vikram Lander Mission: தடங்கலை தவிர்த்து தானாக தரையிறங்கிய லேண்டர்
நிலவில் சில இடங்களில் பெரிய கல் இருக்கும் மற்றும் பள்ளம் இருக்கும். அந்த மாதிரி கல் மீது லேண்டரின் கால் பட்டால் அது சாய்ந்துவிடும். அதே போல பள்ளத்துக்கு உள்ளே லேண்டரின் கால் போனாலும் அந்த விண்கலம் சாய்ந்துவிடும். இது போன்ற நிகழ்வு இந்த முறை ஏற்படாமல் லேண்டரின் செயற்கை நுண்ணறிவு சரியாக வேலை செய்து இடரை களைந்து சரியான இடத்தில் விக்ரம் காலடி எடுத்து வைத்துள்ளது. விக்ரம் சரியாக செயல் பட்டு தவிர்த்துள்ளது.
இந்த முறை விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் இறங்கிய தருணத்தில் முதலில் திட்டமிட்டிறிந்த இறங்க வேண்டிய இடம் சரியில்லாத காரணத்தால் அருகிலேயே இருந்த இன்னொரு இடத்தை தானாக செயற்கை நுண்ணறிவு மூலமாக விக்ரம் லேண்டர் அறிந்து வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்து உள்ளது.
Chandrayaan 3 Vikram Lander Mission எப்படி சாத்தியப்பட்டது?
இன்று மாலை 5.45 மணிக்கு 30 கிமீ உயரத்தில் சுற்றிக்கொண்டு இருந்த விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு, நிலவை நோக்கி லேண்டர் மாடுல் இறக்கப்பட்டது. Rough breaking system மற்றும் Altitude Holding கட்டம் மூலம் விக்ரம் களமிறக்கப்பட்டது.
லேண்டர் கொஞ்சம் கொஞ்சமாக தரையிறக்கப்பட்டது. 2 திரஸ்டர்கள் (4 ல் 2 ஆனது இயங்கும்) பிரேக் போல செயல்பட்டு இதை இறக்கியது. 11.5 நிமிடத்தில் 1.68km கிமீ / நொடி என்ற வேகத்தில் விக்ரம் லேண்டர் 7.4 கிமீ உயரம் வரை கொண்டு வரப்பட்டது. அதன்பின் Altitude Holding கட்டம் மூலம் இதன் உயரம் 6.5 கிமீ உயரம் வரை குறைக்கப்பட்டு மேலும் ALS எனப்படும் Automatic Landing System மூலம் திரஸ்டர்கள் உதவியுடன் உயரம் குறைக்கப்பட்டது.
இந்த கட்டத்தில் ISRO எந்த கமெண்டும் கொடுக்கவில்லை, விக்ரம் லேண்டர் ஆட்டோமேட்டிக் முறையில் இறங்கியது. 800 மீட்டர் உயரத்தை அடையும் அடையும் வரை, 3 நிமிடங்கள் வரை இது தொடர்ந்தது. பின்பு திரஸ்டர்கள் உதவியுடன் இதன் உயரம், வேகம் குறைக்கப்பட்டு Automatic Landing System மூலம் லேண்டர் மேலும் கீழே இறக்கப்பட்டு கடைசியாக 10 மீட்டர் உயரம் இருக்கும் வரை விக்ரம் உயரம் குறைக்கப்பட்டு வந்தது.
இந்த செயல்பாடுகளுக்கு இடையிலேயே லேண்டர் ஆனது கேமரா உதவியுடன் நிலவில் எங்கே இறங்க வேண்டும் என்று கண்டுபிடித்தது. முதலில் திட்டமிட்டிறிந்த இறங்க வேண்டிய இடம் சரியில்லாத காரணத்தால் (Location சரியில்லை என்பதால்) இரண்டாவதாக மீண்டும் லோகேஷனை லேண்டர் தேடியது. விஞ்ஞானிகள் அந்த நொடியில் பதட்டம் அடைந்தனர்.
புத்திசாலித்தனமாக விக்ரம் தானாக இடர் இல்லாத இடமாக பார்த்து நகர்ந்து தரையிறங்க ஆரம்பித்தது. செயற்கை நுண்ணறிவின் சரியான செயல்திறன் மூலமாக இது சாத்தியப்பட்டது. அதாவது 10 மீட்டர் உயரம் வரை கொண்டு செல்லப்பட்ட லேண்டர் ஆனது அங்கிருந்து Free Falling மூலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
“இடர்வுணர் ஆபத்து தவிர்” என்ற செயற்கை நுண்ணறிவு (Artificial Inteligence) ஆனது சரியாக வேலை செய்ததால் விக்ரம் இடரை களைந்து சரியான இடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது
மேம்படுத்தப்பட்ட சந்திராயன் 3
சந்திரயான் 2 ஆனது லேண்டரில் 5 திரஸ்டர்களை கொண்டு இருந்தன. 4 திரஸ்டர்களில் ஒன்று செயல்படாமல் போனால் பாதுகாப்பிற்காக 5வதாக ஒரு திரஸ்டர் சந்திரயான் 2 லேண்டரில் இருந்தது. (spare one) திரஸ்டர் ஒன்று கூடுதலாக இருப்பது கூடுதல் எடையை ஏற்படுத்தி விபத்திற்கு காரணமாக இருக்கும் என்பதால் சந்திரயான் 3ல் உள்ள லேண்டரில் 4 திரஸ்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
சந்திரயான் 2ல் எல்லா திரஸ்டர்களும் ஒரே நேரத்தில் கீழே இறங்கும் போது இயங்கும். ஆனால் சந்திரயான் 3ல் 2 திரஸ்டர்கள் முதலில் செயல்படும். அந்த 2 திரஸ்டர்கள் செயல் இழக்கும் பட்சத்தில் மற்ற 2 திரஸ்டர்கள் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது . அப்படித்தான் இந்த முறை திரஸ்டர்கள் திட்டமிடப்பட்டபடி இயங்கியது.
சந்திரயான் 3ல் கேமரா
சந்திரயான் 2 ஆனது சிக்னல்களை மட்டுமே பூமிக்கு அனுப்பியது. அந்த சிக்னல்களை வைத்தே ரோவர் சரியாக செல்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடித்தார்கள். அதனால் சிக்னல் போனால் ரோவருக்கு என்ன ஆனது என்று தெரியாது. மாறாக சந்திரயான் 3ல் ஆனது கேமரா பெற்றுள்ளது. இந்த கேமரா ஆனது ஒவ்வொரு மீட்டருக்கும் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பும்.
இது ரோவர் எங்கே செல்கிறது எப்படி செல்கிறது என்று அறிய உதவும். அதனால் நிலவின் தரைப்பகுதியில் பெரிய கல் இருந்தால் ரோவரை தள்ளி நகர்த்தி தரையிறங்க வைக்க முடியும். ரோவரை கேமரா மூலம் இனி சிறப்பாக கணிகாணிக்க முடியும்.
சென்சார் மற்றும் கேமரா காரணமாக பாறைகளை தவிர்த்துவிட்டு இந்த முறை சமதளத்தில் ரோவர் களமிறங்க முடிந்தது. மேம்படுத்தப்பட்ட சந்திராயன் 3 காரணமாக நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்து உள்ளது. தற்போது இந்த ரோவர் 14 பூமி நாட்கள் (ஒரு சந்திர நாள்) நிலவின் மேற்பரப்பில் பொருட்களை சேகரிக்கும்.
Latest Slideshows
-
Aalavandhan Trailer : ஆளவந்தான் ரீ-ரிலீஸ் | மிரட்டலாக வெளியான ட்ரெய்லர்
-
Kedar Jadhav : கேதார் ஜாதவ் அடிப்படை விலை இரண்டு கோடியா?
-
Naveen ul haq : நான் விராட் கோலியை திட்டவே இல்லை
-
Vijayakanth Health Condition : விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள நல்ல செய்தி
-
Saba Nayagan Trailer : அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
Artemis 3 திட்டத்தில் நாசா 2027-ம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டம்
-
Green Credit : 2028 இல் COP33 ஐ நடத்த இந்தியா விரும்புகிறது | COP28 இல் பிரதமர் மோடி அறிவிப்பு
-
International Day Of Disabled Persons 2023 : ஸ்டாலின் நலத்திட்ட நிதியை உயர்த்தி பெருமிதம்
-
Ragi Flour Benefits : கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ குணங்கள்
-
அரிதாக காணப்படும் Mole என்ற ஒரு பாலூட்டி