Google நிறுவனத்திற்கு போட்டியாக ஓபன் ஏஐ நிறுவனம் ChatGPT Search சேவையை அறிமுகம் செய்துள்ளது

இந்த ஒட்டுமொத்த உலகமும் தற்போது AI (Artificial Intelligence) பின்னால் சென்று கொண்டு இருக்கிறது. இதற்கிடையே ஓபன் ஏஐ நிறுவனம் ChatGPT Search இன்ஜின் வசதியை அறிமுகம் செய்துள்ளது. சர்ச் இன்ஜினாக செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனத்திற்கு இது பெரிய அளவில் போட்டியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

நாம் எதாவது தேட நினைத்தால் முதலில் செல்வது கூகுள் இணையதளத்திற்குத் தான். இந்த உலகத்தையே Google Search Engine ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த சர்ச் இன்ஜின் துறையில் கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக முதலில் யாகூ இணையதளம் இருந்தது. ஆனால் பின்னர் யாகூ இணையதளம் படிப்படியாக காணாமல் போனதால் ஒட்டுமொத்தமாக கூகுள் நிறுவனம் தன்வசப்படுத்தியது.

கூகுள் நிறுவனத்தின் ஆதிக்கம்

சமீபகாலங்களில் கூகுளின் ஆதிக்கத்தை உடைப்பதற்கு பல முயற்சிகள் செய்தபோதும் எதுவும் கை கொடுக்கவில்லை. இந்நிலையில்தான் ஓபன் ஏஐ நிறுவனம் ChatGPT Search இன்ஜின் சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. தற்சமயம் கட்டணம் செலுத்தி உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ChatGPT Search

இந்த சேவையானது விரைவில் கல்வி மற்றும் நிறுவன பயனர்களுக்கு விரிவுபடுத்துவதற்கு ஓபன் ஏஐ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு ChatGPT Search என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது கூகுள் சர்ச் இன்ஜின் போலவே செயல்படுகிறது. மேலும் இதற்கு தனியாக செயலி (App) உருவாக்காமல் அந்நிறுவனம் சாட் ஜிபிடியில் வருவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.         

ஒரு விஷயத்தை சாட் ஜிபிடியில் தேடும்போது இணையத்தில் தேட வேண்டுமா என்ற ஆப்ஷன் உங்களிடம் பாப் அப் ஆகும். அதை நீங்கள் கிளிக் செய்தவுடன் சாட் ஜிபிடி மூலம் தேட முடியும். மேலும் ஏற்கனவே மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஜெமினி ஆகியவற்றில் இந்த வசதி இருக்கும் நிலையில் தற்போது ஓபன் ஏஐ நிறுவனம் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனத்திற்கு போட்டி

இதற்கு முன் சாட் ஜிபிடியிடம் 2021-ஆம் ஆண்டு வரையிலான தகவல்கள் மட்டுமே இருந்தது. இதனால் தற்போதைய நடப்பு நிகழ்வுகளை அதில் தெரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. இந்நிலையில்தான் ஓபன் ஏஐ நிறுவனம் சர்ச் இன்ஜின் போல செயல்படுவதற்கு மாற்றியுள்ளனர். இந்த ChatGPT Search வருகையால் Search Engine துறையில் பெரிய அளவில் போட்டி உருவாகும். இதுவரைக்கும் எந்த போட்டியும் இல்லாமல் கூகுள் (Google) மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது இதற்கு போட்டியாக ChatGPT Search வந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply