Chennai Airport Recruitment 2023: 10-ம் வகுப்பு முடித்தவரா நீங்கள்..? சென்னை AIRPORT-ல் 105 காலியிடங்கள்..!

விமான நிலையத்தில் வேலை தேடுபவரா நீங்கள் உங்களுக்கு தற்போது விமான நிலைய வேலைவாய்ப்பு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் காலியாக உள்ள தள்ளுவண்டி மீட்பர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு செய்தி தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 105 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அதிகார்வப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Airport Recruitment 2023 Details

அறிவிப்பு வெளியான தேதி : 27-08-2023 

கல்வித் தகுதி : அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 105 காலிப் பணியிடங்கள் உள்ளன

வயதுத் தகுதி : 01.08.2023 அன்று வரை 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அதே நேரம், ஓ.பி.சி (OBC ) பிரிவினர் 30 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி ( SC /ST ) பிரிவினர் 32 வயது வரையிலும் விண்ணப்பித்து கொள்ளலாம்.

சம்பளம் விவரம்: மாதம் ரூ. 21,300/-

தேர்வு செய்யப்படும் முறை: இந்த தள்ளுவண்டி மீட்பர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த தள்ளுவண்டி மீட்பர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.aaiclas.aero என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ. 250-யும், இருப்பினும் எஸ்.சி/ எஸ்.டி மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-08-2023 மாலை 6 மணிவரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

 

Latest Slideshows

Leave a Reply