Chennai Corporation Budget 2024 : சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியாவின் முக்கிய அறிவிப்புகள்

மேயர் பிரியா 21/02/2024 நேற்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் (Chennai Corporation Budget 2024) பல்வேறு திட்டங்கள், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை வாசித்தார்.

“EmpowHER உடற்பயிற்சி கூடம்” :

பெண்களுக்கான “EmpowHER உடற்பயிற்சி கூடம்” வார்டுக்கு ஒன்று என்ற வீதத்தில் 200 வார்டுகளிலும் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

Sponge Park :

சென்னை மாநகராட்சியில் வெள்ள தடுப்புப் பணியாக மழை காலங்களில் மழைநீர் சேகரிக்கும் குளமாகவும் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க மற்றும் குளங்கள் மற்றும் பூங்காக்களில் Sponge Park அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீர்நிலைகள் புனரமைப்பு :

ரூ.10 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகரில் உள்ள 8 நீர்நிலைகள் புனரமைக்கப்படும்.

கல்வி சுற்றுலா :

ரூ.1.16 கோடி மதிப்பீட்டில் 4 பள்ளி பேருந்துகள் சென்னைப் பள்ளி மாணாக்கர்களை கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து செல்வதற்காக கொள்முதல் செய்யப்படும்.

  • மயான பூமிகள் ரூ.10 கோடி செலவில் நவீன முறையில் மேம்படுத்தப்படும்
  • 19 விளையாட்டுத்திடல்கள் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்

Chennai Corporation Budget 2024 - 2024-2025 ஆம் ஆண்டு கல்வி துறைக்கான பட்ஜெட் :

  • மொத்தம் 419 பள்ளிகளில் LKG வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணாக்கர்களுக்கு ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் பள்ளிச் சீருடைகள் வழங்கப்படும்.
  • 255 மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ.7.64 கோடி மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
  • ரூ.35 இலட்சம் செலவில் சென்னைப் பள்ளிகளில் 6-12 ஆம் வகுப்பு மாணாக்கர்கள் வளர்இளம் பருவத்தில், எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக 10 ஆலோசகர்கள் தற்காலிகப் பணியாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள்.
  • உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு இசைக்குழுவினை அமைக்க 11 பள்ளிகளுக்கு மொத்தம் ரூ.11 இலட்சம் நிதி ஒதுக்கப்படும்.
  • 10 ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மீண்டும் சென்னைப் பள்ளிகளிலேயே 11-ஆம் வகுப்பில் சேர்ந்தால், அவர்களில் 50 மாணாக்கர்களை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ISRO) மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) போன்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.

Chennai Corporation Budget 2024 - 2024-2025ஆம் ஆண்டு பொது சுகாதாரத்துக்கான பட்ஜெட் :

  • சென்னை மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கால்நடைகளை பிடிக்கும் பணிக்காக வருடத்திற்கு ரூ.1.16 கோடி செலவினத்தில் 1,2,3,4,7,11,12,14 மற்றும் 15 ஆகிய 9 மண்டலங்களுக்கு, தலா 5 நபர் வீதம் 45 தற்காலிக பணியாளர்கள், சுய உதவி குழுக்கள் மூலம் நியமிக்கப்படுவார்கள்
  • சென்னை மாநகராட்சியில் வளர்க்கப்படும் மாடுகளை முறைப்படுத்த போதிய இடவசதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டுள்ள மாட்டு உரிமையாளர்களின் ‘மாட்டுத் தொழுவங்களுக்கு உரிமம் வழங்கும் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும்.
  • புதியதாக ஒரு மாட்டுத்தொழுவம் ஆனது சென்னை மாநகராட்சியின் தெற்கு வட்டாரத்தில் அமைக்கப்படும்.
  • சென்னை மாநகர எல்லைக்குள் சுற்றித் திரியும் தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த, நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வது மற்றும் புதியதாக 7 நாய் பிடிக்கும் வாகனம் கூடுதலாக கொள்முதல் செய்யும் திட்டத்திற்காக ரூ.70 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • 3 நடமாடும் கால்நடை தடுப்பூசி மருந்து செலுத்தும் வாகனங்கள் (Mobile Veterinary Vaccination Vehicles) ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
  • நோய் பரப்பும் கொசுக்களுக்கான மருந்தின் எதிர்ப்பு சக்தியை கண்டறிய Vector Control Monitoring Lab அமைத்தல், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து நான்காம் நிலை தொழிளாளர்களுக்கும் ரூ.8 கோடி நிதி ஒதுக்கீட்டில் முழு உடல் பரிசோதனை செய்தல், சென்னை மாநகராட்சியில் தாய்மார்களுக்கான மகப்பேறு சிறப்பு அழைப்பு மையம் (High Risk Mother’s Call Centre) அமைத்தல் நடைபெறும்.
  • பூங்காக்கள் மற்றும் சாலைகளில் உள்ள செடி கொடிகளுக்கு நீர் ஊற்ற 6 தண்ணீர் டேங்கர் லாரிகள் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
  • சென்னை மாநகராட்சியில் பொது மக்கள் மருத்துவமனைகள் மற்றும் பொதுக்கழிப்பிடங்கள் இருக்கும் இடத்தினை அறியும் வகையில் புதிய அலைபேசி வலைதள செயலி கொண்டுவரப்படும்.

Chennai Corporation Budget 2024 - மேம்பாட்டு நிதி உயர்வு :

2024-2025 ஆம் நிதியாண்டு முதல் பெருநகர சென்னை மாநகராட்சி “மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதியானது” ரூ.2 கோடியிலிருந்து ரூ.3 கோடியாகவும் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு “வார்டு மேம்பாட்டு நிதி” ரூ.40 இலட்சத்திலிருந்து ரூ.45 இலட்சமாக உயர்த்தப்படும்.

  • பட்ஜெட்டில் பேருந்து சாலைகள், மருத்துவ சேவைகள் துறை, பாலங்கள், வருவாய் உள்ளிட்ட துறைகளுக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கும் நிகழ்வு ஆனது இன்று (22.02.2024) காலை 10 மணியளவில் நடைபெறும் என மேயர் அறிவித்தார்.

Latest Slideshows

Leave a Reply