Chennai Grand Masters Winner 2023 : டி.குகேஷ் 2-வது வெற்றியை பெற்றார்

Chennai Grand Masters Winner 2023 :

சென்னையில் இந்தியாவின் வலிமையான கிளாசிக்கல் சூப்பர் போட்டி “சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2023 – 15/12/2023 to 21/12/2023” ஆனது லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. முதல் முறையாக இந்திய நாட்டில் நடைபெறும் இந்த கிளாசிக்கல் சூப்பர் போட்டியில் பர்ஹாம் மக்சூட்லூ, அர்ஜுன் எரிகைசி, லெவன் அரோனியன், டி.குகேஷ்சனன், ஸ்ஜுகிரோவ், பெண்டலா ஹரிகிருஷ்ணா, பாவெல் எல்ஜனோவ் மற்றும் அலெக்சாண்டர் ப்ரெட்கே என்ற உலகின் பல முன்னணி வீரர்கள் பங்கு பெற்றுள்ளனர். தற்போது இந்தியாவில் சதுரங்கத்தில் மிகப் பெரிய இந்திய திறமைசாலிகள் முதலிடத்தை எட்டும் அடிப்படையில் மிகப்பெரிய ஏற்றம் ஆனது கண்டுள்ளது.

Chennai Grand Masters Winner 2023 : இந்த கிளாசிக்கல் சூப்பர் செஸ் போட்டியின் 5-வது சுற்று ஆட்டத்தில் 19/12/2023 நேற்று இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், ஹங்கேரியின் சனான் சுகிரோவுடன் மோதினார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ்  முன்னேறி 40-வது நகர்த்தலின் போது (Chennai Grand Masters Winner 2023) வெற்றி பெற்றார். இதன் மூலம் டி.குகேஷுக்கு முழுமையாக ஒரு புள்ளி ஆனது கிடைத்தது. இது இந்த கிளாசிக்கல் சூப்பர் செஸ் போட்டி தொடரில் டி.குகேஷ் கைப்பற்றும் 2-வது வெற்றி ஆகும். இந்த வெற்றி மூலம் குகேஷ் 3.5 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் (Chennai Grand Masters Winner 2023) பிடித்துள்ளார்.

ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூடன் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஹரிகிருஷ்ணா தனது 5-வது சுற்றில் மோதினார். ஹரிகிருண்ஷா வெள்ளை நிற காய்களுடன் விளையாடி வந்தார். ஹரிகிருண்ஷா தனது 51-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிரா செய்தார். அமெரிக்காவின் லெவோன் அரோனியனுடன் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி மோதிய ஆட்டம் ஆனது 55-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. உக்ரைனின் பாவெல் எல்ஜனோவ் செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் 56-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.

முதல் 5 சுற்றுகளின் முடிவுகள் :

  • இந்தியாவின் டி.குகேஷ் 5 சுற்றுகளின் முடிவில் 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
  • தலா 3 புள்ளிகளுடன் ஹரிகிருஷ்ணா, பாவெல் எல்ஜனோவ் ஆகியோர் முறையே 2 மற்றும் 3-வது இடம் வகிக்கின்றனர்.
  • 4 முதல் 6-வது இடங்களில் அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ, இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் உள்ளனர்.
  • 7-வது இடத்தில் ஹங்கேரியின் சனான் சுகிரோவ் 2 புள்ளியுடன் உள்ளார்.
  • 8-வது இடத்தில் செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கே ஒரு புள்ளியுடன் உள்ளார். 

20/12/2023 இன்று நடைபெறும் 6-வது சுற்று ஆட்டங்களில் டி.குகேஷ்-பாவெல் எல்ஜனோவ், லெவோன் அரோனியன்-அலெக்சாண்டர் ப்ரெட்கே, அர்ஜுன் எரிகைசி-பர்ஹாம் மக்சூட்லூ, ஹரிகிருஷ்ணா-சனான் சுகிரோவ் மோதுகின்றனர். இந்த வலிமையான கிளாசிக்கல் சூப்பர் போட்டி “சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2023 – 15/12/2023 to 21/12/2023” ஆனது தமிழக அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், MGD1, NODWIN கேமிங்,  மற்றும் செஸ்பேஸ் இந்தியா ஆகியவற்றால் இணைந்து நிதியுதவி அளித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply