Chennai Mandates CCTV In Pharmacies : சென்னையில் அனைத்து மருந்து கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவு

Chennai Mandates CCTV In Pharmacies :

சென்னையில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் (Chennai Mandates CCTV In Pharmacies) என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பின்னணியில் பல உள்நோக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள மருந்து கடைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு (Chennai Mandates CCTV In Pharmacies) பிறப்பித்துள்ளார். உத்தரவின்படி, அனைத்து மருந்து கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். சமீப காலமாக தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதனைத் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு முன்பு போல் எளிதில் போதைப் பொருட்களை கடத்த கொண்டுவர முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் பெரும்பாலான இளைஞர்கள் போதை ஊசிக்கும், போதை மாத்திரைகளுக்கும் அடிமையாகி இருப்பது அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில மாத்திரைகள் மற்றும் மருந்துகளில் இயற்கையாகவே போதை தரும் வஸ்துகளை சேர்த்திருப்பார்கள். உதாரணமாக, பிரசவத்தின் போது வலியை குறைக்க பயன்படும் மருந்துகளை இவர்கள் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அத்தகைய மாத்திரைகள் மற்றும் ஊசி மருந்துகள் நிறைய உள்ளன. இந்த ஊசி, மாத்திரைகளை வாங்கி கல்லூரி இளைஞர்கள் மற்றும் பிறரிடம் மிக அதிக விலைக்கு விற்கின்றனர்.

குறிப்பாக, இந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் கொடுக்கக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் இவர்கள் மருந்து கடைகளின் உரிமையாளர்களிடம் லஞ்சம் கொடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்து இந்த மருந்துகளை சட்டவிரோதமாக வாங்கி பல மடங்கு அதிக விலைக்கு விற்கின்றனர். இது வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, மருந்துக் கடைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கும் யோசனை எழுந்தது. இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் கண்டிப்பாக சிசிடிவி கேமரா (Chennai Mandates CCTV In Pharmacies) பொருத்த வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 30 நாட்களுக்குள் சிசிடிவி கேமரா பொருத்தாத மருந்து கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் மருந்து வாங்குபவர்களை கண்காணிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நடவடிக்கை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Latest Slideshows

Leave a Reply