Chennai Metro Time Extended : கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Chennai Metro Time Extended - சென்னையில் மெட்ரோ ரயில் சேவை உலக கோப்பை கிரிக்கெட் ரசிகர்களுக்கு நீட்டிப்பு

பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 27/10/2023 இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் அக்டோபர் 13 ஆம் தேதி 13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் விளையாடவுள்ளது. இதனையொட்டி சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது கையெழுத்தாகியுள்ளது.

Chennai Metro Time Extended : உலக கோப்பை கிரிக்கெட் போட்டி காணவரும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் (Chennai Metro Time Extended) தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது – பாகிஸ்தான் Vs தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆனது சென்னை சேப்பாக்கம் M.A.சிதம்பரம் மைதானத்தில் 27/10/2023 இன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி, சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் கிரிக்கெட் ரசிகர்களை ஊக்கிவிக்கும் பொருட்டு பயண போக்குவரத்து செலவின தொகையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆனது ஏற்றுள்ளது.

அதனால், போட்டியை பார்த்துவிட்டு திரும்பி செல்லும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை 27/10/2023 இரவு 12 மணி வரை (Chennai Metro Time Extended) நீட்டிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி ரசிகர்கள் பயன்படுத்தி எந்தவித கட்டணமும் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம். மெட்ரோ ரெயில்கள் 15 நிமிட இடைவெளியில் (Chennai Metro Time Extended) இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த இலவச பயணம் ஆனது ரசிகர்கள் மைதானத்திற்கு செல்லும்போது பொருந்தாது என்றும்  திரும்பி வரும்போது மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட மெட்ரோ இரயில் சேவை குறிப்புகள் :

  • நிலவழித்தடம் ஆனது பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் நோக்கி இரயில்கள் இயக்கப்படும்.
  • பச்சை வழித்தடம் ஆனது புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையம் வரை  இரயில்கள் 15 நிமிட இடைவெளிகளில் இயக்கப்படும்.
  • பொதுவாக போட்டி நடைபெறும் நாட்களில் இரவு 11 மணி முதல் 12 மணி வரை பச்சை வழித்தடத்தில் இருந்து நீல வழித்தடம் மாறுவதற்கான ரயில் சேவை ஆனது இயக்கப்படாது. இதற்கேற்ப கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது பயணத்தினை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply