Chennai New Film City : சென்னை குத்தம்பாக்கத்தில் அதி நவீன தொழில்நுட்பங்களுடன் புதிய திரைப்பட நகரம்

Chennai New Film City :

நவீன தொழில்நுட்பங்களுடன் சென்னை பூந்தமல்லி குத்தம்பாக்கத்தில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் 152 ஏக்கரில் திரைப்பட நகரம் (Chennai New Film City) உருவாக உள்ளது. நவீன தொழில்நுட்ப LED சுவர்கள் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய சர்வதேச தரத்தில் புதிய திரைப்பட நகரம் உருவாக உள்ளது.

ஒரு காலத்தில் சினிமா படப்பிடிப்பு என்றாலே சென்னைதான் என்று இருந்தது. சென்னையில் நிறைய படப்பிடிப்பு தளங்கள் இருந்தன. அதனால் பிரம்மாண்டமான படங்களின் படப்பிடிப்புகள் ஆனது சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. ஆனால் நாளடைவில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கு சென்று படப்பிடிப்புகள் நடத்தப்படும் முறை செயல்படுத்தப்பட்டது. அதனால் சென்னையில் உள்ள பல படப்பிடிப்பு தளங்கள் ஆனது வேறு வடிவம் எடுத்து வருகின்றன. முதன் முதலாக சென்னையில் கட்டப்பட்ட எம்ஜிஆர் திரைப்பட நகரம் ஆனது பாழடைந்து வனம் போல காட்சி தருகின்றது.

சென்னை குத்தம்பாக்கத்தில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அதி நவீன திரைப்பட நகரம் ஆனது அமைக்கப்படுகிறது :

அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சென்னை அருகே அதி நவீன திரைப்பட நகரம் (Chennai New Film City) ஆனது அமைக்கப்படும் என திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2023-24ம் ஆண்டுக்கான செய்தித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் பூந்தமல்லி அருகில் 140 ஏக்கரில் 500 கோடி செலவில் திரைப்படம் நகரம் அமைக்கப்படும் என அறிவித்தார். தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் சார்பில் திரைப்பட நகரம் அமைக்க மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு திரைப்பட நகரம் (Chennai New Film City) அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உரை :

திரைப்பட நகரம் அமையும் இடத்தில் அதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்வது குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்த வாரம் இந்தச் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக உயர்மட்ட அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்படும். உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் கூடிய திரைப்பட நகரத்தை உள்ளூர், பிராந்திய மற்றும் தேசிய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உருவாக்க வேண்டும்” என்பதே நோக்கம் என்றார்.

சென்னை, மும்பை, ஹைதராபாத் மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் உள்ள தனியார் ஸ்டுடியோக்களில் தற்போது நாளொன்றுக்கு ரூ.5 லட்சம் வசூலிக்கப்படுகின்றது. தற்போது நவீன தொழில் நுட்ப வசதிகளை திரைப்பட நகரத்தில் வழங்க தமிழக அரசு  திட்டமிட்டுள்ளதால், செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்பட நகரத்தில் உருவாக்கப்பட உள்ள நவீன தொழில் நுட்ப வசதிகள் :

  • பெரிய அளவிலான ஸ்டுடியோ, படப்பிடிப்பு அறைகள் மற்றும் விசுவல் எபெக்ட்ஸ் ஸ்டுடியோ ஆகியவை திரைப்பட நகரத்தில் அமையவுள்ளது.
  • மேலும் எடிட்டிங், டப்பிங், பணிமனை, உணவகம், அலுவலகங்கள், கூட்ட அரங்கம், மற்றும் முதலுதவி அறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  • விமான நிலையங்கள், நீதிமன்றங்கள், தெருக்கள் மற்றும் தயாரிப்புக்குப் பிந்தைய ஸ்டுடியோக்களின் மெகா அளவிலான தொகுப்புகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  • அது மட்டுமின்றி, பட தயாரிப்பு நேரத்தையும் செலவையும் குறைக்க நவீன தொழில்நுட்ப LED சுவர்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இது வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், தொலைதூர இடங்களை மெய்நிகரில் உருவாக்கி, பெரிய 270 டிகிரி வளைந்த LED திரைகளுக்கு முன் நேரில் இருப்பது போல அமைத்து திரைத்துறையினர் படப்பிடித்து நடத்த உதவும்.
  • ஆபத்தான வெடிகுண்டு வெடிக்கும் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகளை இந்தப் புதிய நுட்பத்தைப் பயன்படுத்தி LED சுவர்களில் இயக்க முடியும். அபாயங்களைக் குறைத்து நடிகர்கள் சிறப்பாக செயல்பட இது உதவும். மேலும் எப்போது நடிகர் குதிக்க வேண்டும் என்பது சரியாகத் தெரியும்.
  • LED சுவர்களில் சஹாரா பாலைவனத்திலிருந்து நியூயார்க் தெருக்கள் வரை லட்சக்கணக்கான காட்சிகள் கிடைக்கும்.
  • ஒருவர் திரைப்படத் தயாரிப்பாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப விளக்குகளை பகலில் இருந்து நள்ளிரவு ஆக கூட மாற்றலாம்.
  • படப்பிடிப்பு நடைபெறும் இடத்தைத் தேடுவதற்கு எடுக்கும் நேரம், மற்றும் துணை நடிகர்கள் உட்பட மொத்தக் குழுவையும் அழைத்து செல்வதற்கு எடுக்கும் நேரம் ஆகியவற்றை இந்த அமைப்பு குறைக்கும்.

இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மெதுவாக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த திரைப்பட நகரம் (Chennai New Film City) தற்போது அமைந்தால் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று திரைப்படத்துறையினர் கூறியுள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply