Chennai to Tirupathi Vande Bharat Train Route: சென்னையில் இருந்து திருப்பதிக்கு  இவ்ளோ சீக்கிரமா போயிரலாமா? 

சென்னை – திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தை அதிக மக்கள் பயன்படுத்துவார்கள் என்பதால் புதிய ரயில் சேவையை அறிமுகப்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

வந்தே பாரத் ரயில் சேவை

இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில், சென்னை ஐ.சி.எப்-ல் கட்டப்பட்டு இயக்கப்படுகிறது. தற்போது இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. வெளி நாடுகளில் புல்லட் ரயில்களுக்கு இணையாக இந்த ரயில்கள் பார்க்கப்படுகின்றன.

தற்போது தமிழகத்திற்கு பெங்களூரு வழியாக சென்னை மைசூரு மற்றும் கோவை ஆகிய சிட்டிகளை கடந்து வருகிறது வந்தே பாரத் ரயில்கள். இப்போது இவை சென்னையில் இருந்து ஈரோடு வரை இயக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக சென்னையில் இருந்து நெல்லைக்கு புதிய வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Chennai to Tirupathi Vande Bharat Train Route

இந்நிலையில், அடுத்த வந்தே பாரத் ரயிலுக்கான திட்டம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை-நெல்லைக்கு அடுத்தபடியாக சென்னை-திருப்பதி வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்கும் மத்திய அரசின் திட்டத்தில், புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வரும் நிலையில், சென்னை-திருப்பதி ரயில் பாதை முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ரயிலை செயல்பாட்டுக்கு கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் திருப்பதி இடையே குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் 25 நிமிடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரயில் 130 கிமீ வேகத்தில் சென்றால் பயண நேரம் வெகுவாகக் குறையும். இந்த வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து திருப்பதிக்கு மூன்று மணி நேரத்திற்குள் இயக்கப்படும்.

இந்த ரயிலுக்கான ஒப்புதல் கிடைத்தவுடன் சென்னையில் இருந்து திருப்பதிக்கு ரயில் புறப்படும் நேரம் மற்றும் திருப்பதியில் இருந்து சென்னைக்கு ரயில் புறப்படும் நேரம், கட்டண விபரங்கள், பயண நேரம் குறித்த தகவல்கள் வெளியாகும். மேலும் ஒரு நாளுக்கு எத்தனை டிரிப் இந்த ரயில் பயணிக்கிறது என்ற தகவல் வெளியாகும்.

சென்னை-திருப்பதி தூரம் குறைவாக இருப்பதால் இந்த ரயில் ஒரு நாளைக்கு அதிக முறை இயக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் அதிக பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்தி பயனடையலாம். வந்தே பாரத் ரயில் வழித்தடத்தில் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனமாக இது மாறக்கூடும்.

Latest Slideshows

Leave a Reply