Chennai To Tirupati Highway - ரூ.1,530 கோடியில் 6 வழிச்சாலை

Chennai To Tirupati Highway :

ஆந்திர மாநிலத்தின் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்றான திருப்பதிக்கு  சென்னையில் இருந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆனது 6 வழி தேசிய நெடுஞ்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது. இந்த 6 வழி Chennai To Tirupati Highway திட்டத்தை ரூ.1,530 கோடியில் செயல்படுத்த டெண்டர் அழைப்பு ஆனது விடுக்கப்பட்டுள்ளது. இந்த 6 வழி Chennai To Tirupati Highway பயன்பாட்டுக்கு வரும் போது போக்குவரத்து நெரிசல் ஆனது நன்றாக குறையும். இந்த திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக சென்னையிலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை ஆனது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

மேலும் ஆந்திரா-சென்னை இடையே உள்ள விமான நிலையங்களுக்கு வாகனங்கள் அதிகளவில் வந்து செல்கின்றன. அதேபோல் ஆந்திரா-சென்னை இடையே உள்ள துறைமுகங்களுக்கு வாகனங்கள் அதிகளவில் வந்து செல்கின்றன. இதனால் இந்த ஆந்திரா-சென்னை இடையே உள்ள தடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த சாலையை நன்றாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை திருப்பதி மார்க்கத்தில் உள்ள ரேணிகுண்டாவை அடுத்துள்ள காஜுல மான்யம் வரை ஏற்கெனவே 4 வழிச்சாலை ஆனது உள்ளது. எனவே இங்குள்ள கல்லூர் கூட்டுச்சாலை பகுதியிலிருந்து, புத்தூர், நகரி, திருத்தணி வழியாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வரை இந்த தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை ஆந்திராவில் 37 கிலோமீட்டர் தூரமும் மற்றும் தமிழகத்தில் 43 கிலோமீட்டர் தூரமும் 4 வழிச்சாலையிலிருந்து 6 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்படும் திட்டத்தை ரூ.1,530 கோடியில் செயல்படுத்த டெண்டர் அழைப்பு ஆனது விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலை மட்டுமின்றி திருப்பதி மாவட்டத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜ சுவாவி கோவில், சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேசுவர கோவில், காளஹஸ்தி சிவன் கோவில், அப்பலயகுண்டம் பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில் உள்ளிட்ட ஏராளமான கோவில்கள் உள்ளன மற்றும் ஆகாச கங்கா, தலகோனா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல சுற்றுலா தலங்களும் உள்ளன. திருப்பதிக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலான பக்தர்கள் இந்த கோவில்களுக்கும் வந்து செல்கின்றனர். ஆனால் பக்தர்கள் இங்கு சாலை வசதி ஆனது சரியான முறையில் இல்லை என பல ஆண்டுகளாக வருந்தி வருகின்றனர். இந்த 6 வழி Chennai To Tirupati Highway சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் திருப்பதிக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்கள் எளிதாக போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக பயணம் செய்யலாம். சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் ஏழுமலையானை எளிதாகவும் மற்றும் விரைவாகவும் தரிசிக்கலாம்.

Latest Slideshows

Leave a Reply