Chennai Udhayam Theatre Closed : மூடப்படுகிறது சென்னை உதயம் தியேட்டர்

Chennai Udhayam Theatre Closed :

சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வரும் புகழ்பெற்ற உதயம் திரையரங்கம் மூடப்பட உள்ளதாக (Chennai Udhayam Theatre Closed) அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உதயம் திரையரங்கம் சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றாக உள்ளது. அசோக் நகரில் உள்ள இந்த தியேட்டரில் மினி, சந்திரன், உதயம், சூரியன் என நான்கு திரைகளுடன் இயங்கி வந்தது. கொரோனாவுக்கு பிறகு திரையரங்குகளில் மக்கள் வருகை வெகுவாக குறைந்தது. குறிப்பாக மக்கள் பழைய தியேட்டர்களுக்கு செல்வதை விட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னையின் அடையாளமாக இருந்த உதயம் திரையரங்கம் காலத்துக்கு ஏற்ப எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே பழையபடி திரையிட்டு வந்தனர். இதன் காரணமாக அங்கு மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே சென்றது. இதனால் தியேட்டர் உரிமையாளர் வேறுவழியின்றி விற்க முடிவு செய்து, முன்னணி கட்டுமான நிறுவனம் ஒன்றிக்கு பெரும் தொகைக்கு விற்பனை செய்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் 10 நாட்களுக்கு முன்புதான் கையெழுத்தாகி இருந்தது.

உதயம் தியேட்டரை வாங்கிய கட்டுமான நிறுவனம் அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டப் போகிறது. சமீபகாலமாக சென்னையில் தியேட்டர்கள் இடிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள சாந்தி திரையரங்கம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் வணிக வளாக கட்டிடம் கட்டி வாடகைக்கு விடப்பட்டது. அதேபோல் அபிராமி மெகா மாலும் இடித்துவிட்டு அங்கு தியேட்டருடன் கூடிய குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உதயம் திரையரங்கும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. அசோக் நகரில் சுமார் 40 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த தியேட்டர் தற்போது மூடப்பட்டுள்ளதால் (Chennai Udhayam Theatre Closed)  ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பல திரையரங்குகள் மூடப்படுவதற்கு OTD தளங்களும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. படம் வெளியான ஒரு மாதத்தில் OTT-ல் வெளியாகும் என திரையரங்கு உரிமையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply