Chennai Weather : சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மழை

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காலையிலேயே மழை பெய்த நிலையில் (Chennai Weather) மேலும் 20 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலான மழை (Chennai Weather)

சென்னையில் இன்று காலையிலேயே பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி (Chennai Weather) அடைந்துள்ளனர். சென்னையில் கடுமையான வெயில் சுட்டெரித்த நிலையில், புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையிலேயே பரவலான மழை பெய்தது. இந்நிலையில், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், ஆலந்தூர், வண்டலூர், கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. புறநகர்ப் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதேபோல், தென் தமிழகத்தில், சிவகங்கை, காரைக்குடி, திண்டுக்கல், புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும் காலையில் மழை பெய்துள்ளது. அதிகாலை மழையால் வானிலை குளிராக மாறியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

20 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு

Chennai Weather - Platform Tamil

இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் குறைந்த அளவிலான மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக (Chennai Weather) சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply