Chess Olympiad 2024 : முதல் சுற்றுலேயே சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா - வைஷாலி

45 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது (Chess Olympiad 2024) தொடங்கிய நிலையில், முதல் சுற்றில் தமிழகத்தில் இருந்து பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கு வெற்றிகரமான தொடக்கத்தை பெற்று தந்துள்ளனர்.

Chess Olympiad 2024 - 45 வது செஸ் ஒலிம்பியாட் :

செஸ் ஒலிம்பியாட் ஆனது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த முறை செஸ் ஒலிம்பியாட் போட்டியானது சென்னையில் நடைபெற்றது. தற்போது 45 வது செஸ் ஒலிம்பியாட் ஹங்கேரியில் புடபெஸ்டிஸ் தொடங்கப்பட்டுள்ளது. இந்த 45 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று நேற்று முன்தினம் (செப்டம்பர் 11) தொடங்கியது. அந்த வகையில் இந்த தொடர் செப்டம்பர் 23ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மொத்தம் 11 சுற்று போட்டிகள் கொண்ட புடபெஸ்டில் நடைபெறும் 45 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் 193 அணிகளும், இதுமட்டுமில்லாமல் மகளிர் பிரிவில் 181 அணிகளும் பங்கேற்கின்றன. இதில் இந்தியா சார்பாக ஓபன் பிரிவில் டி குகேஷ், பிரக்ஞானந்தா, பென்டலா ஹரிகிரிஷ்ணா, அர்ஜுன் எரிகைசி ஆகியோர் அடங்கிய அணியானது பங்கேற்றது. இதேபோல் மகளிர் பிரிவில் வைஷாலி, ஹரிகா துரோனவல்லி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக், வன்டிகா அகர்வால் ஆகியோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்றுள்ளது.

முதல் சுற்றிலேயே அசத்திய பிரக்ஞானந்தா :

ஓபன் பிரிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது. பிரக்ஞானந்தா, ஹரிகிரிஷ்ணா, விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 1 புள்ளி பெற்று மொராகோவை ஒயிட் வாஷ் செய்தனர். பிரக்ஞானந்தா தனது எதிர் அணி வீரரான 47 வயது முகமது திசிரை, 18 வது நகர்த்தலில் இருந்தே சவாலை கொடுத்தார்.

சிறப்பாக விளையாடிய வைஷாலி :

மகளிர் பிரிவில் 3.5 – 0.5 என்ற கணக்கில் இந்திய அணி ஜமைக்காவை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் தலா ஒரு புள்ளி, வந்திகா அகர்வால் டிரா செய்து 0.5 புள்ளி பெற்று வெற்றி பெற்றனர். முதல் சுற்றிலேயே இந்திய ஆடவர் அணி மொராக்கோவையும், மகளிர் அணி ஜமைக்காவையும் வீழ்த்தியது.

Latest Slideshows

Leave a Reply