Chief Minister Stalin Announces Cash Prize : உலக செஸ் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தைச் சேர்ந்த டி.குகேஷ் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் (Chief Minister Stalin Announces Cash Prize) நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்று சாதனை படைத்துள்ளார்.

18-வது உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை டி.குகேஷ் மிக இளவயதில் வென்றுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் டி.குகேஷுக்கு எனது வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருந்ததோடு தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ள குகேஷுக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு (Chief Minister Stalin Announces Cash Prize) வழங்கிட வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் டி.குகேஷுக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

விடாமுயற்சிக்கு கிடைத்த வெகுமதி - விஸ்வநாதன் ஆனந்த் (Chief Minister Stalin Announces Cash Prize)

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள குகேஷுக்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்துக்கள் (Chief Minister Stalin Announces Cash Prize) தெரிவித்துள்ளார். ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் டி.குகேஷ் வெற்றி குறித்து தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

நான் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றபோது டி.குகேஷ் பிறக்கவே இல்லை. அதனால் அவரை நான் அந்த பையன் என்று அழைக்கவே விரும்புகிறேன். தற்போது 12.12.2024 அன்று சிங்கப்பூரில் நடைபெற்ற 18-வது உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் அந்த பையன் உலக செஸ் சாம்பியன்ஷிப் (Chief Minister Stalin Announces Cash Prize) பட்டத்தை வென்றுள்ளார். அனைவரும் இறுதி சுற்று டிராவில் முடியும் என எதிர்பார்த்திருந்த வேளையில் டி.குகேஷ் கடைசி சுற்றில் தமிழ் சினிமாக்களில் வருவது போல சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். எனக்கு டி.குகேஷ் 14-வது சுற்றில் வெற்றி பெற்றது மிகவும் ஆச்சரியம் அளித்தது.  இது அவரது விடாமுயற்சிக்கு கிடைத்த வெகுமதி எனவும் பாராட்டியுள்ளார்.

அவரது அணுகுமுறை, அவரது அமைதி மற்றும் தன்னம்பிக்கை எனக்கு பிடித்துள்ளது. டி.குகேஷ் வெற்றிக்கு பிறகு உணர்ச்சி பெருக்கில் வெளிப்படையாக ஆனந்த கண்ணீர் சிந்தியது நெகிழ்ச்சியான தருணம். தற்போது செஸ் வரலாற்றில் இளம் சாம்பியன் என்ற மகத்தான சாதனையை பெற்றுள்ள குகேஷ் இனிமேல் தனது ஆட்டத்தை தொடர்ந்து அனுபவித்து விளையாட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply