Chief Minister Stalin praised Nelson: நெல்சனை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

Chief Minister Stalin praised Nelson:

     ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஜெயிலர் (Chief Minister Stalin praised Nelson ) திரைப்படத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பார்த்துவிட்டு நெல்சன் திலீப் குமாரை பாராட்டியுள்ளார்.  நெல்சன் இது குறித்து புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். 

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் வெளியானது ஜெயிலர் திரைப்படம். ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கும் வழக்கம் போல் சிலர் எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்து வருவதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

   இந்நிலையில் இப்படம் வெளியான ஒரே நாளில் உலகம் முழுவதும் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது திரையுலகினரை ச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தளபதி விஜய் நெல்சன் திலீப்குமாரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின. ‘ஜெயிலர்’ திரைப்படம் ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடுவது போல அமைந்துள்ளதாகவும், படத்தில் நடித்துள்ள மற்ற பிரபலங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளார்.

  இந்நிலையில், ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் நெல்சன் திலீப்குமாரை நேரில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதையடுத்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தனது இணையதள பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் வெளியிட்டுள்ள பதிவில், “ஜெயிலரைப் பார்த்து உற்சாகமூட்டும் வகையில் பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிக்க நன்றி. உங்கள் வார்த்தைகளால் எங்களது படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று பதிவிட்டிருந்தார். மேலும் நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரை தொலைபேசியில் அழைத்து ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply