China Discovered Ocean On Mars : செவ்வாய் கிரகத்தில் கடல் இருந்ததற்கான தடயம் கிடைத்துள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

தற்போது செவ்வாய் கிரகம் வறண்ட பாலைவனமாக இருக்கிறது. ஆனால் சீன ரோவர் கொடுத்த தகவல்களை ஆய்வு செய்த போது ஒரு காலத்தில் இங்கு கடல் இருந்ததற்கான தடயம் கிடைத்துள்ளதாக (China Discovered Ocean On Mars) சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அப்படி எனில் இனி வரும் நாட்களில் நமது பூமியும் செவ்வாய் கிரகம் மாதிரி ஆகிவிடுமோ என்ற அச்சம் விஞ்ஞானிகளுக்கு தற்போது எழுந்துள்ளது.

ஜூரோங் ரோவர்

சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமிக்கு அடுத்து 4-வது கோளாக செவ்வாய் கோள் உள்ளது. பூமியிலிருந்தது சுமார் 22 கோடி கி.மீ தொலைவில் இருக்கும் இந்த கோளில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா? நீர் இருக்கிறதா? என்பது குறித்து தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சீனா இதற்காக ‘ஜூரோங்’ என்ற ரோவரை அனுப்பியிருந்தது. இந்த ரோவர் (China Discovered Ocean On Mars) செவ்வாயில் நீர் இருக்கிறதா? என்று ஆய்வு செய்து தற்போது சில தகவல்களை அனுப்பியுள்ளது. 

இந்த ஜூரோங் ரோவர் தற்போது செயல்பாட்டில் இல்லை. ஆனால் இந்த ரோவர் கொடுத்த தகவல்களை பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இதில் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் கடல் இருந்ததற்கான சான்று (China Discovered Ocean On Mars) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கிரகத்தில் ஆறு ஓடியதற்கான சான்று ஏற்கெனவே கிடைத்திருந்தன. ஆனால் கடல் இருந்ததா? என்று தெரியாது. ஆனால் தற்போது பென்சில்வேனியா பல்கலைக்கழக மாணவர்கள் கடல் இருந்ததை உறுதி செய்திருக்கின்றனர்.     

விஞ்ஞானிகள் பூமியில் நிலத்தடியின் தன்மை குறித்து தெரிந்து கொள்ள கிரவுண்ட் பெனிட்ரேட்டிங் ரேடாரை (Ground Penetrating Radar – GPR) பயன்படுத்துவார்கள். இந்த ரோவர் நிலத்தின் அடிப்பகுதியில் அதிர்வலைகளை அனுப்பும். இந்த அதிர்வலைகள் பாறைகள், தண்ணீர், எரிமலைகள் (China Discovered Ocean On Mars) போன்றவற்றின் மீது மோதும்போது திரும்ப எதிரொலிக்கும். இதன் அடிப்படையில்தான் நிலத்தடி நீர்மட்டம், மண்ணின் தன்மை உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் கடல் (China Discovered Ocean On Mars)

China Discovered Ocean On Mars - Platform Tamil

பென்சில்வேனியா பல்கலைக்கழக மாணவர்கள் செவ்வாய் கிரகத்தின் வடக்கு பகுதி நிலப்பரப்பை ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்களும், பூமியின் கடற்கரையில் கிரவுண்ட் பெனிட்ரேட்டிங் ரேடார் ஆய்வின் போது கிடைத்த தகவல்களும் (China Discovered Ocean On Mars) ஒரே மாதிரியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அப்படியெனில் செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் கடல் இருந்திருக்கிறது என்று அர்த்தம் என சீன ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும் பூமியின் முதல் உயிரியான பாக்ட்ரியா உருவானது கடலில்தான். எனவே செவ்வாய் கிரகத்தில் கடல் இருந்திருக்கிறது எனில் அங்கும் உயிர்கள் இருந்திருப்பதற்கான சான்றுகள் இருக்க கூடும் என்றும் யோசித்து வருவதாகவும், இருப்பினும் முழுமையான ஆய்வுக்கு பின்னரே உண்மை தெரிய வரும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply