China Earthquake : சீனாவில் 18/12/2023 நேற்று நள்ளிரவு 11.59 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

China Earthquake :

சீனாவின் வடமேற்கு கன்சு மாகாணத்தில் நேற்று 11.59 மணியளவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் (China Earthquake) ஏற்பட்டது. சீனாவின் லான்சூவிலிருந்து 102 கிலோ மீட்டர் தொலைவிலும், 35 கிமீ ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லிங்சியா செங்குவான் ஜென் என்ற இடத்தில் இருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில் ரிக்டரில் 6.2 அலகுகளாகப் இந்த நிலநடுக்கம் ஆனது பதிவானது. இந்த நிலநடுக்கம் (China Earthquake)  மக்கள் அனைவரும் நன்றாக உறங்கிக் கொண்டிந்த நேரத்தில் ஏற்பட்டது. மக்கள் பயத்தில் வீடுகளில் இருந்து ஓடிவந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

ஏராளமான வீடுகள் உள்பட அடுக்குமாடி கட்டிடங்கள் நிலநடுக்கத்தின் காரணமாக இடிந்து விழுந்து சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 100 பேர் வரை பலியானதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளன. இந்த நிலநடுக்கத்தால் மின்சாரம், குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. கிங்காய் மாகணத்தில் ஹைடோங் நகரத்தில் இந்த நிலநடுக்கத்தால் 11 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 100 பேருக்கும் மேல் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் (China Earthquake) வெளிவந்துள்ளன.

நிலநடுக்க நிவாரண மீட்பு பணிகள் :

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு நிலநடுக்க நிவாரண மீட்பு பணிகள் ஆனது நிலநடுக்கம் நடந்த சிறிது நேரத்தில் தொடங்கப்பட்டன. போர்க்கால அடிப்படையில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சீனாவின் அவசர மேலாண்மை அமைச்சகத்துடன் இணைந்து நான்காம் நிலை பேரிடர் நிவாரண அவசர நிலையை செயல்படுத்தியுள்ளது. வீடுகளின் இடிந்து விழும் காட்சிகளும் வீட்டில் உள்ள பொருட்கள் குலுங்கும் காட்சிகளும் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கன்சு மாகாணத்தின் சில பகுதிகள் மட்டும் இன்றி அருகில் உள்ள கிங்காய் மாகாணத்திலும் இந்த நிலநடுக்கம் (China Earthquake) ஆனது உணரப்பட்டுள்ளது. சீனா ஆனது அடுத்தடுத்து நிலநடுக்கத்தை சந்தித்து கொண்டே வருகிறது. சீனாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் கிழக்கு பகுதிகளில் ரிக்டர் அளவில் 5.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்டது. இதுபோன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் ஒரு பகுதியாகவே  சீனா பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply