China Has Created Artificial Sun : சீனா 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளது

சீனா தற்போது விண்வெளி துறை உட்பட பல்வேறு துறைகளில் தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பநிலையில் செயற்கை சூரியனை உருவாக்கும் சோதனையை (China Has Created Artificial Sun) வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளது. இந்த புதிய சோதனையின் மூலம் வரும் காலங்களில் மின் உற்பத்தியை மொத்தமாக மாற்றமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நவீன உலகில் மின்சார வாகனங்கள், மின்னணு சாதனங்கள், ஸ்மார்ட் கருவிகள் அதிகளவில் வந்துவிட்டதால்  மின்சார தேவையானது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்கவும் மின்சார உற்பத்தியை அதிகரிக்கவும் சர்வதேச அளவில் ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சீனா நியூக்ளியர் ஃப்யூஷன் முறையில் மின்சாரத்தை உருவாக்கும் முயற்சியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது.

அணுக்கரு இணைவு

சீனா ஆராய்ச்சியாளர்கள் தற்போது அணுக்கரு இணைவு (Nuclear Fusion) சோதனை மூலம் செயற்கை சூரியனை (China Has Created Artificial Sun) உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த ஃப்யூஷன் எனர்ஜி ரியாக்டரின் மூலம் உருவான பிளாஸ்மா சுமார் 1000 வினாடிகள் நீடித்ததாக சீனா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற ஆய்வை கடந்த 2023-ல் நடத்திய போது பிளாஸ்மா வெறும் 403 வினாடிகள் மட்டுமே நீடித்த நிலையில் தற்போது இதை முறியடித்து 1000 வினாடிக்கு பிளாஸ்மா நீடித்துள்ளதாகவும், இது புதிய வரலாற்று சாதனை எனவும் சீனா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

10 கோடி செல்சியஸ் வெப்பநிலை (China Has Created Artificial Sun)

China Has Created Artificial Sun - Platform Tamil

ஆய்வாளர்கள் நியூக்ளியர் ஃப்யூஷன் மூலம் ஆற்றலை உருவாக்க பல காலமாக முயற்சி செய்து வருகிறார்கள். இந்த நியூக்ளியர் ஃப்யூஷன் விளைவு ஏற்படும் போது பிளாஸ்மாவில் 100 மில்லியன் டிகிரி (10 கோடி) செல்சியஸ் வெப்பநிலை (China Has Created Artificial Sun) ஏற்படும், இந்த வெப்பத்தை நீண்ட நேரம் தக்கவைப்பது சவாலாக இருந்த நிலையில், சுமார் 1000 வினாடிகள் இந்த வெப்பத்தைத் தக்கவைத்து மாபெரும் வரலாற்று சாதனையை செய்துள்ளனர்.  

இது தொடர்பாக சீனா பிளாஸ்மா இயற்பியல் நிறுவனத்தின் இயக்குநர் சாங் யுண்டாவ் அவர்கள் கூறியுள்ளதாவது, ஃபியூஷன் கருவியானது  நிலையான பிளாஸ்மா சுழற்சியை செயல்படுத்த பல ஆயிரம் வினாடிகள் அதிக செயல்திறனில் செயல்பட வேண்டும். வரும் காலங்களில் ஃபியூஷன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் நாங்கள் சாதித்துள்ளோம். இதன் மூலம் இனி வரும் காலத்தில் மனித குலத்திற்குத் தேவையான ஆற்றலை ஃபியூஷன் செயல்பாட்டின் மூலம் நாம் எளிதாக உற்பத்தி செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

ஏன் முக்கியம்

இந்த நியூக்ளியர் ஃப்யூஷன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிந்தால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். சூரியனில் இந்த நியூக்ளியர் ஃப்யூஷன் மூலமாக அதீத வெப்பம் உற்பத்தியாகிறது. இதையே நாம் செயற்கை முறையில் அதிகளவில் (China Has Created Artificial Sun) எந்தவொரு மாசுபாடும் இல்லாமல் மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்பதால் தான் இந்த சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.

Latest Slideshows

Leave a Reply