China Launched 10G Broadband : வரலாற்றில் முதல் முறையாக சீனா 10ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது

இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் 5G சேவையை செயல்படுத்துவதில் டெலிகாம் நிறுவனங்கள் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் வரலாற்றில் முதல் முறையாக சீனா 10G சேவை (China Launched 10G Broadband) பொது மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்து சரித்திரம் படைத்துள்ளது.

10ஜி சேவை அறிமுகம் (China Launched 10G Broadband)

டெலிகாம் சேவை நிறுவனமான யூனிகாம் (Unicom) மற்றும் ஹூவாய் (Huawei) ஆகியவை இணைந்து சீனாவின் ஹெபே மாகாணத்தின் சுனான் பகுதியில் உலகின் முதல் 10G பிராட்பேண்ட் (China Launched 10G Broadband) வலைத்தளத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.

டெலிகாம் சேவை அசுர வளர்ச்சி

China Launched 10G Broadband - Platform Tamil

உலகளவில் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் டெலிகாம் சேவையானது அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நவீனயுகத்தில் டேட்டா (Data) முக்கிய வர்த்தகமாக மாறி வரும் வேளையில் இண்டர்நெட் வேகத்தை மேம்படுத்துவது மிகவும் அத்தியாவசியமானதாக (China Launched 10G Broadband) உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது சீனா உலக வரலாற்றில் முதல் முறையாக 10G பிராண்ட்பேன்ட் சேவையை மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்துள்ளது. தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அதிவேக இன்டர்நெட் வலைத்தளம் அதிநவீன 50G Passive Optical Network (PON) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பயன்படுத்தபடுகிறது. மேலும் பைபர் ஆப்டிக் கட்டமைப்பின் மூலம் இணைய வேகத்தை கிகாபிட் வரம்பிலிருந்து 10 கிகாபிட் என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது.

இந்த 10G இன்டர்நெட் மூலம் 2 மணிநேரம் கொண்ட 4K குவாலிட்டி படத்தை வெறும் 5 முதல் 10 நொடிகளுக்குள் பதிவிறக்கம் (Download) செய்யலாம். இந்த அதிவேக இண்ட்நெட் சேவையை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியின் முதற்கட்டமாக சீனாவின் சுனான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் (China Launched 10G Broadband) சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் அப்லோடு வேகமானது (Upload Speed) 1008 Mbps ஆகவும், டவுன்லோடு வேகம் (Download Speed) 9834 Mbps ஆகவும் இருந்தது. மேலும் இந்த வலைத்தளம் குறைந்த Latency அளவான 3 மில்லிசெக்ண்ட் மட்டுமே கொண்டு இருந்ததையும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

Latest Slideshows

Leave a Reply