China Launches Quantum Computer : கூகுள் சூப்பர் கணினியைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினியை சீனா அறிமுகம் செய்துள்ளது

புதிய டிஜிட்டல் தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்வதில் அமெரிக்காவும், சீனாவும் போட்டிபோட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் தொழில் நுட்பங்களுக்குப் போட்டியாக சீனா சிறப்பு வாய்ந்த பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து உலகில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு உதாரணமாக கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் Chat GPT AI-ஐ பின்னுக்கு தள்ளி சீனாவின் DeepSeek AI முதலிடம் பிடித்தது. இந்நிலையில் அமெரிக்காவின் கூகுள் சூப்பர் கம்ப்யூட்டரை விட 10 லட்சம் மடங்கு அதி வேகமான குவாண்டம் கம்ப்யூட்டரை சீனா அறிமுகம் (China Launches Quantum Computer) செய்துள்ளது. சீனாவின் இந்த கண்டுபிடிப்பு அறிவியல் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

ஜுச்சோங்ஷி 3 குவாண்டம் கணினி (China Launches Quantum Computer)

சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த சூப்பர் குவாண்டம் கம்ப்யூட்டரை கண்டுபிடித்துள்ளனர். இந்த குவாண்டம் கம்ப்யூட்டருக்கு அவர்கள் ஜுச்சோங்ஷி 3 என்று பெயர் (China Launches Quantum Computer) வைத்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் அசாத்தியமான திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டரை வடிவமைத்திருந்தது. சாதாரன கம்ப்யூட்டர்கள் 1000 வினாடிகளில் செய்யும் வேலையை இந்த கம்ப்யூட்டர் வெறும் 200 விநாடிகளில் செய்து அசத்தியது.

ஆனால், சீனா ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2023-ம் ஆண்டு ஜுச்சோங்ஷி வகை குவாண்டம் கம்ப்யூட்டர்களை உருவாக்க தொடங்கினார்கள். இது கூகுள் சூப்பர் கணினி 200 விநாடிகளில் செய்யும் ஒரு வேலையை வெறும் 14 விநாடிகளில் செய்து அசத்தியது. அப்போதிலிருந்து கூகுள் நிறுவனத்தின் கணினிக்கும், சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டருக்கும் இடையே போட்டி தொடங்கியது. இதன் காரணமாகத்தான் தற்போது ஜுச்சோங்ஷி 3 குவாண்டம் கம்ப்யூட்டர் (China Launches Quantum Computer) உருவாக்கப்பட்டிருக்கிறது. இது கூகுளின் சூப்பர் கம்ப்யூட்டரை விட 10 லட்சம் மடங்கு அதிவேகமானதாகும். மேலும் கூகுள் கணினி 200 விநாடிகளில் செய்யும் வேலையை வெறும் 1 நொடிக்குள் முடித்து காட்டியிருக்கிறது. இதில் 15×7 105 க்யூபிட்களும், 182 கப்பளர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குவாண்டம் கணினியின் பயன்கள்

China Launches Quantum Computer - Platform Tamil

கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று உலகையே புரட்டி போட்டது. கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் IBM-ன் Quantum Computing முக்கிய பங்கு வகித்தது. இரசாயன அணுக்கள் மற்றும் புரதங்களை (Proteins) குவாண்டம் கணினிகளால் (China Launches Quantum Computer) கணக்கீடு செய்து, புதிய மருந்துகளுக்கான வடிவமைப்பை எளிதாக்க முடியும். மேலும் புற்றுநோய், எய்ட்ஸ், அல்சமைர் போன்ற முக்கிய நோய்களுக்கான மருந்துகளை கண்டுபிடிக்க சூப்பர் கம்ப்யூட்டர் உதவியாக இருக்கும். இதுமட்டுமல்லாமல் புயல், மழை, வெப்பநிலை போன்றவற்றை மிகச்சரியாக கணிக்கவும், மருத்துவ தரவுகள், அரசாங்க தகவல்களை பாதுகாக்கவும் குவாண்டம் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் Bitcoin, Cryptocurrency, Blockchain போன்றவற்றின் பாதுகாப்பை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply