China Published A New Map : சீனா அருணாச்சல பிரதேசத்தை ஆக்கிரமிக்க முயற்சி

அருணாச்சலத்தில் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி வரைபடம் வெளியிட்டுள்ளது - China Published A New Map:

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள 30 பகுதிகளுக்கு சீன அரசு பெயர் சூட்டி சர்ச்சையை (China Published A New Map) ஏற்படுத்தியுள்ளது. சீன அரசு ஆனது சட்டவிரோதமாக இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளுக்கு புதிய பெயர்களை அறிவித்து சொந்தம் கொண்டாடி வருகிறது. சீன அரசு ஆனது அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளை தங்களின் மொழியில் புதிய பெயர்களை அறிவித்தும் மற்றும் தங்கள் நாட்டு வரைபடத்தில் இணைத்தும் தொடர்ச்சியான அத்துமீறல்களைச் செய்துவருகிறது. சமீபத்தில் சீன அரசு புதிய பெயர்களை சூட்டி வெளியிட்டுள்ள வரைபடம் இந்தியாவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய பகுதிகள் திபெத்தின் தெற்குப் பகுதியான ஜுங்னானின் கீழ் வந்ததாக சீனா அதில் குறிப்பிட்டிருந்தது. ஏற்கனவே சீன சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு மறுபெயரிட்டு 3 பட்டியல்களை (China Published A New Map) வெளியிட்டுள்ளது. அதனை தெற்கு திபெத் எனக் குறிப்பிட்டு வருகிறது.

  • அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களின் பெயர்களை மாற்றி முதல் பட்டியலை 2017ல் வெளியிட்டது.
  • அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள 15 இடங்களின் பெயர்களை மாற்றி இரண்டாவது பட்டியலை 2021ல் வெளியிட்டது.
  • அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள 11 இடங்களுக்கு சீன பெயர்களை சூட்டி  மூன்றாவது பட்டியலை 2023ல் வெளியிட்டது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் 30 இடங்களின் (11 குடியிருப்புப் பகுதிகள், 12 மலைகள், நான்கு ஆறுகள், ஓர் ஏரி, ஒரு மலைப்பாதை) பெயர்களை மாற்றி சீனா தற்போது நான்காவது பட்டியலை வெளியிட்டுள்ளது. சீன அரசு ஆனது அதன் சீன மொழியான மாண்டரின் மொழியிலும் மற்றும் திபெத்திய மொழியிலும் மாற்றி அதை சீன நாட்டு அரசு நாளிதழிலும் வெளியிட்டுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை ஆனது சீனத்தின் இந்த அடாவடி நடவடிக்கையை தொடர்ந்து கண்டித்து வருகிறது. அமெரிக்கா ஆனது அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அறிக்கை வெளியிட்டு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாச்சலத்தை சீனா உரிமை கொண்டாடவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த பெயர் சூட்டல் நடவடிக்கையால் இந்தியா – சீனா ஆகிய இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Latest Slideshows

Leave a Reply