China Secretly Test Nuclear Weapon : சீனா அணுஆயுத சோதனைக்கு ரகசியமாக தயாராகி உள்ளது

China Secretly Test Nuclear Weapon - சீனா ரகசியமாக அணுஆயுத சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது :

சீனா மீண்டும் அணுஆயுத சோதனைகளை (China Secretly Test Nuclear Weapon) நடத்துவதற்கு தயாராகி வருவதன் பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. சீனா ரகசியமாக அணுஆயுத சோதனை (China Secretly Test Nuclear Weapon) நடத்துவதற்கான களத்தை தயார் செய்து வருவதை சேட்டிலைட் போட்டோக்கள் உறுதி செய்துள்ளன. அதன் பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

சீனா தற்போது வல்லரசு நாடுகளில் ஒன்றாக உள்ளது. அருணாச்சல பிரதேசத்துக்கு சீனா ஆனது தொடர்ந்து உரிமை கொண்டாடி வருவதோடு மட்டுமல்லாமல் லடாக் எல்லையில் நம் ராணுவ வீரர்களிடம் சண்டைக்கும் சென்று வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. இந்தியாவும் இப்படியான சூழலில் சீனாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றது.

சீனா இதைப் போலவே பிற நாடுகளிடமும் முரண்டு பிடித்து வருகிறது. குறிப்பாக சீனா-அமெரிக்கா இடையே பனிப்போர் ஆனது நிலவி வருகிறது. பல விஷயங்களில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் அமெரிக்காவும் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டில் சீனாவும் இருந்து வருகின்றன. தற்போது இத்தகைய சூழலில் தான் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது மிகப்பெரிய சதித்திட்டத்தை சீனா தனது கையில் எடுத்துள்ளது. அதாவது சீனா ஆனது மீண்டும் அணுஆயுத சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மற்றும் சீனா அதற்கான இடத்தை ரகசியமாக உருவாக்கி வருவதாகவும் ஒரு பகீர் தகவல் ஆனது வெளியாகி உள்ளது.

லோப்நூர் பகுதியில் எடுக்கப்பட்ட சேட்டிலைட் போட்டோக்கள் :

லோப்நூர் பகுதியில் சீனா மீண்டும் அணுஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதாவது சீனாவில் வறண்டு போன உப்பு ஏரி பகுதியான லோப்நூர் எனும் பகுதி உள்ளது. இது தற்போது பாலைவனம் போல் உள்ளது. இந்த லோப்நூர் பகுதி ஆனது சீனாவின் சின்ஜியாங்கில் இருந்து தக்லமாகன் மற்றும் கும்டாக் பாலை வனத்துக்கு இடையே அமைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்த லோப்நூர் பகுதியில் தான் சீனா தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியது. சீனா அதன்பிறகு தொடர்ந்து அணுஆயுதங்களை அதிகரித்துக் கொண்டது. இந்நிலையில் தான் சீனா தற்போது மீண்டும் லோப்நூர் பகுதியில் அணுஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. நவீன அணுஆயுதங்களை சோதனையிடும் வகையில் சீனா அங்கு களம் தயாராக்கி வருகிறது.

அணுஆயுத சோதனை நடத்த வசதியாக 60 அடி ஆழத்தில் பல இடங்களில் சீனா துளைகள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா பல ஆண்டுகளாக இது தொடர்பாக கண்காணித்து வந்தது. இந்நிலையில் தான் தற்போது லோப்நூர் பகுதியில் அணுஆயுத சோதனைகளை நடத்துவதற்கு சீனா தயாராகி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது  சீனாவின் லோப்நூர் பகுதியில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சேட்டிலைட் போட்டோக்கள் இதனை உறுதி செய்துள்ளன. அதன்படி லோப்நூர் பகுதியில் பல்வேறு கட்டுமானங்களும், ஆழமான துளைகள் இருப்பதை இந்ந சேட்டிலைட் போட்டோக்கள் உறுதி செய்துள்ளன. இதுமட்டுமின்றி புதிய ரோடுகள் ஆனது அமைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

அங்குள்ள கட்டமைப்புகள் அடிப்படையில் பார்த்த  ஆய்வாளர்கள் சீனா அணுஆயுதங்களில் நவீனமயமாக்கும் முயற்சியில் இறங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.  நேஷனல் ஜியோஸ்பேஷியல்-இன்டெலிஜென்ஸ் ஏஜென்சியின் முன்னாள் ஆய்வாளர் ரென்னி பாபியார்ஸால் இதனை கண்டுபிடித்துள்ளார் (பென்டகன் -அமெரிக்க பாதுகாப்புத்துறை யின்  ஒரு அங்கம்). சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோன்மென்ட்டின் அணுசக்தி நிபுணர் டோங் ஜாவோ இதுபற்றி கூறுகையில், “சீனா மீண்டும் அணுஆயுத சோதனைகளை நடத்துவதற்கு தயாராகி வருவதை சேட்டிலைட் போட்டோக்களின் ஆதாரங்கள் உறுதி செய்கிறது” என்றார். நியூ மெக்சிகோவில் உள்ள லாஸ் அலமோஸ் ஆயுத ஆய்வகத்தின் முன்னாள் இயக்குநரான சீக்ஃப்ரைட் எஸ் ஹெக்கர், “லோப்நூர் பகுதியில மறுகட்டமைப்பு உலக நாடுகள் இடையே அணுஆயுதங்கள் சார்ந்த போட்டியை அதிகப்படுத்த வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.

தற்போது இது பரபரப்பை ஏற்படுத்தியபோதும் இதுதொடர்பாக சீனா இன்னும் வாய்த்திறக்காத நிலையில் உள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில்  இந்த சேட்டிலைட் போட்டோக்கள் உள்ளன. தற்போதைய சூழலில் சீனா எதையும் வெளிப்படையாக கூறுவதை தவிர்த்து வருவதால் அந்த நாடு புதிய அணுஆயுத சோதனைக்கான இடத்தை தயார் செய்வது ஏன்? மற்றும் சீனா எந்த நாட்டை குறிவைத்து இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காத நிலை தற்போது உள்ளது. இது அசாதாரண சூழலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

Latest Slideshows

Leave a Reply