Chiranjeevi Honoured With Guinness World Record : கின்னஸ் உலக சாதனை படைத்தார் சிரஞ்சீவி

திரைப்படங்களில் வெவ்வேறு அசைவுகளை வெளிப்படுத்தியதற்காக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கின்னஸ் உலக சாதனையாளர் (Chiranjeevi Honoured With Guinness World Record) விருது வழங்கப்பட்டுள்ளது.

சிரஞ்சீவி :

நடிகர் சிரஞ்சீவி 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆந்திராவில் பிறந்தார். அவரது தந்தை கொனிடேலா வெங்கட் ராவ், ஒரு கான்ஸ்டபிள் ஆவார். படிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், படிப்பை முடித்துவிட்டு சினிமா வாய்ப்பை தேடி சென்னை வந்தார். இதனையடுத்து, 1978 இல் புனாதிரல்லு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆனாலும் இவரது வாழ்க்கையை சிந்துராம் திரைப்படம் தான் மாற்றியது. நான்கு தசாப்தங்களுக்கு மேலான இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் என 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ருத்ர வீணை, சுயம் க்ருஷி, இந்திரா, சைரா நரசிம்ம ரெட்டி, கேங் லீடர், ஸ்டாலின், ஷங்கர் தாதா என அனைத்து படங்களும் மிகப்பெரிய வசூலை பெற்றன. இவர் ரகுபதி வெங்கையா விருது, ஒன்பது பிலிம்பேர் விருதுகள், நந்தி விருதுகள், பத்ம பூஷன் என பல விருதுகளை பெற்றுள்ளார்.

Chiranjeevi Honoured With Guinness World Record :

சிரஞ்சீவி தன்னை ஒரு சிறந்த நடிகராக நிலை நிறுத்தி பல விருதுகளை வென்றுள்ள இவருக்கு தற்போது மற்றொரு கௌரவம் கிடைத்துள்ளது. அதாவது, 45 ஆண்டுகளில் தனது 156 படங்களில் 537 பாடல்களில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடன அசைவுகளை நிகழ்த்தியுள்ளார். இதனை கௌரவிப்பதற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமீர் கான் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளார். 

பாராட்டிய அமீர் கான் :

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய அமீர் கான், உங்களைப்போல் நானும் சிரஞ்சீவியின் மிகப்பெரிய ரசிகன் தான். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவர் என்னிடம் கேட்ட போது, நான் எதற்கு என்னிடம் கேட்கிறீர்கள். ஆர்டர் போடுங்க சார் என்று சொன்னேன். என்ன கஷ்டமான ஸ்டெப்பாக இருந்தாலும் அசால்டாக ஆடி இருப்பார். அவர் ஆடுவதை பார்த்துவிட்டால், அடுத்து அதில் இருந்து நமது பார்வை மாற்ற முடியாது. அதுதான் சிரஞ்சீவியின் தனித்துவமான திறமை என புகழ்ந்து பேசினார்.

Latest Slideshows

Leave a Reply