Chithha Movie Review : சித்தா படத்தின் திரைவிமர்சனம்...

நடிகர் சித்தார் நடித்துள்ள சித்தா திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை (Chithha Movie Review) பெற்று வருகிறது. இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் உதவி இயக்குனராக தனது திரை வாழ்க்கையை நடிகர் சித்தார்த் தொடங்கினார். இதனை தொடர்ந்து சித்தார்த் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தமிழ், இந்தி, தெலுங்கு என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் சித்தார்த். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்தார்த் நடித்த ‘டக்கர்’ படம் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டக்கருக்குப் பிறகு சித்தார்த் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சித்தார்த் நடிக்கும் ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் சசிகாந்த் ஆவர். இவர் தற்போது இயக்குநராக அறிமுகமாகும் டெஸ்ட் படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் சித்தார்த் நடித்துள்ள “சித்தா” படம் தற்போது திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை (Chithha Movie Review) பெற்று வருகிறது. தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ETAKI என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கப்பட்ட சித்தா படத்தை விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் குமார் எழுதி இயக்கி உள்ளார். சித்தார்த் நடித்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் பிரசாந்த் படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படத்திற்கு இசைமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசைமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ‘சித்தா’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் மையக்கதை :

அண்ணன் இறந்த பிறகு, ஈஸ்வரன் தனது அண்ணி மற்றும் அண்ணன் மகளை கவனித்துக்கொள்கிறார். மகளுக்கு நடக்கும் ஒரு சோகமான சம்பவத்தைத் தாங்க முடியாமல் அவர் என்ன செய்கிறார். அந்த சிக்கலில் அவரே சிக்கிக்கொள்ள அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதையும், அண்ணன் மகளுக்காக சித்தப்பா ஈஸ்வரன் செய்யும் உணர்ச்சிப்பூர்வமான விஷயங்கள் தான் இந்த சித்தா படத்தின் கதையாகும்.

Chithha Movie Review :

Chithha Movie Review : கரணம் தப்பினால் மரணம் என்கிற கதையை எடுத்துக் கொண்டு சில நடிகர்களை தவிர பல புதுமுகங்களை வைத்து கொண்டு அவர்களையும் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். படத்தை பார்க்கலாம் என சொல்லும் அளவிற்கு இயக்குனர் வேலை வாங்கியுள்ளார்.

அண்ணன் இறந்த பிறகு அண்ணியையும் அவள் குழந்தை சுந்தரியையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பான இளைஞனாக நடிக்கும் சித்தார்த். தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்றும், சர்வதேசத் தகுதியுள்ள நடிகர் என்றும் நிரூபிக்கிறார். சுந்தரியாக நடித்திருக்கும் சேட்டை சஹஸ்ராஸ்ரீ, இந்த வயதில் எப்படி இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்துகிறார் என்கிற பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் படத்தின் மூலம் மலையாள நடிகை நிமிஷா சஜயன் தமிழில் அறிமுகமாகிறார். ஒரு துப்புரவு தொழிலாளியாகவும் சித்தார்த்தை காதலிக்கும் இடத்திலும் ஸ்கோர் செய்துள்ளார். குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் என்ற சிக்கலான விஷயத்தை அவர்கள் எடுத்து, அதை தெளிவாகவும் சீராக சொல்லி பாதை பதைக்கவும் பாராட்டவும் வைத்துள்ளார்.

யதார்த்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுத்து, நல்ல வசனங்கள், திரைக்கதை அமைத்து உலகத்தரம் வாய்ந்த படத்தைத் தர அருண்குமாரின் முயற்சியும், தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சித்தார்த்தின் முயற்சியும் படத்துக்குப் பெரிய ப்ளஸாக உள்ளது. விஷால் சந்திரசேகர், திபு நினன் தாமஸ் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு பலம் சேர்த்துள்ளனர். சுரேஷ் பிரசாத்தின் படத்தொகுப்பும் தரமாக உள்ளது. சில காட்சிகளை இறங்கி அடிக்க வேண்டிய இடங்களில் அமைதி காத்து இது போதும் என தயங்கி இருப்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியாகும் தரமான படங்களில் சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படமும் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை. கண்டிப்பாக திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம். சித்தா நடிப்பு, இயக்கம், வசனம், இசை, மெனக்கெடல், திரை மொழி, கரு என அனைத்திலும் சிறந்து விளங்குகிறது.

Latest Slideshows

Leave a Reply