Chithha Teaser : சித்தா படத்தின் டீசர் வெளியீடு

சித்தார்த் நடிக்கும் சித்தா படத்தின் டீசர் (Chithha Teaser) தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய நடிகர் சித்தார்த், பின்னர் இயக்குநர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல சூப்பர் ஹிட் படங்களில் சித்தார்த் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்தார்த் நடிப்பில் ‘டக்கர்’ திரைப்படம் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டக்கர் படத்திற்குப் பிறகு தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். அந்த வகையில் சித்தார்த் நடிக்கும் ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகத் தொடர்ந்து வரும் தயாரிப்பாளர் சசிகாந்த், முதன்முறையாக இயக்குனராக களமிறங்க, மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் டெஸ்ட் திரைப்படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கிடையில் சித்தார்த் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் தான் சித்தா. தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ETAKI என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கப்பட்ட சித்தாவை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி மற்றும் சிந்துபதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் S.U .அருண் குமார் எழுதி இயக்கியுள்ளார். சித்தார்த், நிமிஷயன் நடித்துள்ள இந்த சித்தா படத்திற்கு ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சுரேஷ் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். படத்தின் இயக்குனர் அருண்குமார் மற்றும் கவிஞர் யுகபாரதி ஆகியோர் சித்தாவின் பாடல்களை எழுதியுள்ளனர். செப்டம்பர் 28 ஆம் தேதி சித்தா உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மிகவும் அழுத்தமான கதையம்சம் கொண்ட இப்படம் மக்களின் மனதை தொடும் உணர்வுபூர்வமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சித்தா படத்தின் டீசர் (Chithha Teaser) வெளியாகியுள்ளது. விறுவிறுப்பான இந்த சித்தா படத்தின் டீசர் (Chithha Teaser) சமூக வலைதளங்களில் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Chithha Teaser :

தற்போது சித்தார்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சித்தா’ படத்தின் டீசரானது (Chithha Teaser) மகள் சித்தப்பா உறவை மையப்படுத்தி இருப்பதாக காட்டப்படுகிறது. இவர்கள் இருவரும் எப்பொழுதும் ஒன்றாக இருப்பது போல் காட்டப்படுகிறது. மேலும் மகளுக்கு எதோ ஆபத்து நேர்ந்து இருப்பது போல காட்டப்படுகிறது. இறுதியில் என்ன நடந்தது என்பதே மீதி கதையாகும். டீசர் (Chithha Teaser) தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply