இந்தியாவின் மிகப்பெரிய கோட்டைகளில் ஒன்று Chittor Fort Of Rajasthan

சித்தூர் கோட்டை ஆனது மலையின் மேல் 180 மீட்டர் உயரத்தில், 280 ஹெக்டர் பரப்பளவில், மலைப்பாங்கான சித்தோர்கர் நகரத்தில் அமைந்துள்ளது. இந்த சித்தூர் கோட்டையினடியில் பெரோச் ஆறு பாய்கிறது. 2013இல் UNESCO நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தின் 5 கோட்டைகளில் சித்தூர் கோட்டையையும் (Chittor Fort Of Rajasthan) உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்து உள்ளது. உதய்பூரிலிருந்து கிழக்கே 175 கிமீ தொலைவில் சித்தூர் கோட்டை அமைந்துள்ள இந்தக் கோட்டைக்கு அதைக் கட்டிய சித்ரநாகடா மோரியின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டதாக ஒரு நம்பிக்கை உள்ளது. சித்தூர் கோட்டை ஆனது ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகும். பாண்டவ சகோதரர்களில் ஒருவரான பீமன் இந்த சித்தோர் கோட்டையை கட்டியதாக கூறப்படுகிறது. இந்த சித்தூர் கோட்டையினுள் அரண்மனைகள், கோயில்கள், கோபுரங்கள் மற்றும் வாயில்கள் அமைந்துள்ளது. மேவார் நாட்டின் தலைநகராக 7 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை ராஜபுத்திரர்களின் கீழ் சித்தூர் கோட்டை விளங்கியது. இன்றளவும் இந்த சித்தோர்கர் கோட்டை ஆனது ராஜபுத்திரர்களின் பெருமை, காதல் மற்றும் தைரியத்தின் மொத்த உருவகமாக பெருமையுடன் விளங்குகிறது. இந்த சித்தூர் கோட்டையில்,

 • ஃபதே பிரகாஷ் அரண்மனை
 • ராணா கும்ப அரண்மனை
 • ராணி பத்மினி அரண்மனை

போன்ற பல கவர்ச்சியான அரண்மனைகள், ஜெயின் கோவில்கள் மற்றும் சில தெய்வீக கோவில்கள் உள்ளன. கோட்டையின் நேர்த்தியான கட்டிடக்கலை ஆனது ஏழு வாயில்கள் மற்றும் ஒன்பது அழகிய அம்சங்களைக் கொண்டது. இந்த கோட்டையில் சித்தோர் மௌரியர்கள், மேவாரின் சிசோடியாக்கள் மற்றும் மெடபட்டாவின் குஹ்லியாக்கள் ஆகியோர் வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களில்  வசித்து வந்தனர்.

சித்தூர் கோட்டையில் ஆண்டுதோறும் விமர்சியாக கொண்டாடப்படும் ஜௌஹர் மேளா :

இந்த மாபெரும் சித்தூர் கோட்டை (Chittor Fort Of Rajasthan) பலதரப்பட்ட காலக்கட்டங்களில் பல்வேறு போர்களை சந்தித்துள்ள போதிலும் அலாவுதீன் கில்ஜி மற்றும் அரசர் ரத்னசிம்ஹா இடையே நடந்த போர் முக்கியமானது ஆகும். இந்த போர் இந்திய வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய போர்களில் ஒன்றாகும். மன்னன் ரத்னசிம்ஹாவின் அழகு மனைவியான பத்மினியை அடையும் தீய நோக்கில் டெல்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜி நடத்திய இந்த போர் முக்கியமானது ஆகும். மன்னன் அலாவுதீன் கில்ஜி கோட்டையைக் கைப்பற்றிய பின்னர் 30,000 இந்துக்களை படுகொலை செய்தார்.

கோட்டையில் இருந்த அனைத்து பெண்களும் ஒன்றாக நெருப்பில் இறங்கி தங்களது உயிரை தியாகம் செய்தனர். இந்த சித்தூர் கோட்டையில் ஆண்டுதோறும் ஜௌஹர் மேளா விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இந்தக் கோட்டை எதிரிகளால் கைப்பற்றும் நிலையில் இருக்கும் போது, கோட்டையில் உள்ள ராணிகளும் மற்றும் அரண்மனை மகளிரும், எதிரிகளின் கையில் சிக்கிச் சீரழியாத வகையில் கூட்டுத் தீக்குளிப்பு விழா நடத்தி தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டதை நினைவுகூரும் நிகழ்வு ஜௌஹர் மேளா ஆகும். ஜௌஹர் மேளா ஆனது ராணி பத்மினி மற்றும் உள்ள நீதிமன்றப் பெண்களின் வலிமிகுந்த தியாகத்தை நினைவு கூறுகிறது.

Chittor Fort Of Rajasthan - கோட்டையை சுற்றியுள்ள பார்க்க வேண்டிய இடங்கள் :

கோட்டையில் சிறந்த வரலாற்று பயண இடங்களைத் தேடும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் ஆர்வத்தை தூண்டுகின்ற அரண்மனைகள், கோயில்கள், புல்வெளிகள் மற்றும் ஏரிகள் உள்ளன. கோட்டையில் (Chittor Fort Of Rajasthan) பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில்,

 • ராணா கும்ப அரண்மனை
 • ஃபதே பிரகாஷ் அரண்மனை
 • பத்மினி அரண்மனை
 • மீரா கோயில்
 • காளி மாதா கோயில்
 • கௌமுக் நீர்த்தேக்கம்
 • பாஸ்ஸி வனவிலங்கு சரணாலயம்
 • பத்மாவதி அரண்மனை
 • விஜய் ஸ்தம்பம்
 • சதீஸ் தியோரி கோயில்
 • கீர்த்தி ஸ்தம்பம்
 • ஷ்யாமா கோயில்
 • சன்வாரியாஜி கோயில்
 • பல இந்து கோவில்கள் மற்றும் சில அற்புதமான அரண்மனைகள் ஆகியவை அடங்கும்.

சித்தோர்கர் கோட்டை நுழைவு கட்டண டிக்கெட் விலை :

 • 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு – இலவசம்
 • இந்திய மக்களுக்கு – 5 ரூபாய்
 • வெளிநாட்டினருக்கு – 100 ரூபாய்

இந்த சித்தூர் கோட்டை பல நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளதால் இங்கு விமானம், ரயில் அல்லது பேருந்து மூலமாக எளிதாக சென்றடையலாம்.

Latest Slideshows

Leave a Reply